"you... Son of a Bi**.. டேய்.. horn அடிச்சுட்டு வர வேண்டியது தானடா?" U Turn ல் திரும்பிய போது சட்டென எதிரில் மோதியவனைப் பார்த்து சீறினான் ஸ்ரீராம்
"ஏண்டா அறிவு கெட்ட முண்டம்..எப்படி டா சைக்கிள்ல horn அடிக்க முடியும்?"
"ooh... shit.." காரை மறுபடியும் start செய்தான்.
"ஙொய்யாலே.. வருதுங்க பாரு. ஊட்ல பொன்டாட்டி மேல கீர கோவத்தயெல்லாம் நம்மாண்ட வந்து காட்ட வேன்டியது"
"பொண்டாட்டி.. அவளால தான் எவ்ளோ பிரச்சன.. இன்னைக்கு மீட்டிங்க்கு போறேன்னு தெரிஞ்சும் ம்ச்ச்.. காலையில இருந்து இன்னைக்கு எதுவுமே உருப்படல.Alarm அடிக்க வேண்டிய phone கீழ விழுந்து ரெண்டா உடஞ்சு switch off. Shoe க்குள்ள இருக்க வேண்டிய socks மழைல நனைஞ்சு கெடக்குது.பையன் குடிக்க வேண்டிய பால் என் ஷர்ட்ல கொட்டிடுச்சு.இவ்ளோ பிரச்சனைக்கு அப்றம் மீட்டிங்க்கு போனா ஆபீஸ்ல குடுக்க வேண்டிய document வீட்ல.அந்த manager மாங்கா மடையன் கடுப்பேதிக்கிட்டு இருக்கான் .. shit.. அங்க அங்க U Turn. இதுல ambulance வேறயா?.நை நைனு.பொறுங்கடா டேய்ய்.. .. நீங்க தலைவலி மயக்கத்துக்கெல்லாம் ambulance வைப்பீங்க.நாங்க வேலைய விட்டுட்டு உங்களுக்கு வழிய வேற விடணுமா? பொறுங்கடா டேய்ய்.சைரன் மண்டை வண்டிக்காரனுகளா.. தன் தெருவிற்குள் நுழையும் வரை அவனது மனம் இவ்வளவு பேச்சையும் பேசிவிட்டு இடையிடையே டாக்குமென்ட்டையும் தன் டார்லிங் கயல்விழியையும் நினைத்துக்கொண்டு தான் இருந்தது.
"பால் கொட்டுனதுக்கு கொஞ்சம் ஓவராதான் பேசிட்டேனோ?..உன்னால என் வாழ்க்கையே போச்சு. போயிடுன்னுலாம். சே. நான் அவ்ளோ கத்தினப்போ கூட ஒரு வார்த்தை எதிர்த்து பேசல. போய் செல்லத்த கூல் பண்ணனும்."
கார் உள்ளே நுழையும்போது வாச்மேன் அவன் கார் அருகே ஓடிவந்து "சார்.. என்னாச்சு சார் உங்க போனுக்கு? மேடம் அந்த ஆம்புலன்ஸ்ல தான் போயிட்டு இருக்காங்க. இப்போ போனா புடிச்சுடலாம்."என் கூற நொடியும் தாமதிக்கவில்லை.மருத்துவமனையின் பெயர் அந்த ஆம்புலன்ஸில் பொறிக்கப்பட்டிருந்தது அவன் நினைவுக்கு வரவே விரைந்து சென்றான்.
வரவேற்பறையில் மூச்சைப்பிடித்துக்கொண்டு..
"வெளில நிக்குதே இந்த ஆம்புலன்ஸ்ல வந்தவங்க.."
"அதோ அந்த ICU வார்ட்ல தான் சார்.
நீங்க தான் பேஷண்டோட husbandடா?
உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க நேரா பொயி லெப்ட்ல செகண்ட் ரூம்."
பயந்து கொண்டே அங்கு சென்று பார்த்த போது எல்லோரும் பரபரப்பாக இருக்க ஸ்ட்ரெட்சரோடு ஒரு பெண்ணை உள்ளே அழைத்து சென்றனர்.
உள்ளே நுழைய இருந்த டாக்டரிடம் சென்று "டாக்டர்.." என்றான்
"என்ன சார்!! நீங்க தான் பேஷண்டோட கஸ்பண்டா?கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா?இப்பொ critical condition ஆயிடுச்சு.இதுல கையெழுத்து போடுங்க. கடவுள வேண்டிக்கோங்க".கை நடுங்க கையெழுத்து போட்டதும் கண்கள் இருண்டு கொண்டு வந்தன."கயல்.. என்னை விட்டுட்டு போயிடாதம்மா.." என அழ ஆரம்பித்து விட்டான்.
வரவேற்பறையிலிருந்து மற்றொரு பெண் வேகமாக ஓடி வந்து அவன் முன்பு நின்றாள். "ராம்.. நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு காயத்ரியோட husband கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறார்.அவளுக்கு வேற pain அதிகமாயிடுச்சு.இப்போ என்னப் ..." அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை கட்டி அணைத்துக் கொண்டான்.
"தலைவலியோ தலைப்பிரசவமோ..வலி வன்டிக்குள்ள இருக்குறவனுக்குத்தான் தெரியும்.நீங்க கொஞ்சம் வழி விட்டுருக்கலாம்". கணவனை நன்கு புரிந்திருந்த கயல் பொறுமையாக கூறினாள்.