அவந்திகா

           

Episode -1

காலை 8 மணி செய்திகள் ஒளிபரப்பு வேளையின் போது...

 




'எவ்ளோ நேரம் தாண்டி சாப்ட்டுகிட்டே இருப்ப?.schoolக்கு   time ஆய்டுச்சு.அறிவே இல்லயாடி' என்று    மூடி வைத்திருந்த  tiffin boxஐ  முந்தானையால்  துடைத்து  கொண்டே வந்தாள் அம்மா..  அதை  சிரிதும் சட்டை செய்யாமல் வாயில் இருந்த இட்லியை மெதுவாக மென்று கொன்டிருந்த எனக்கு மண்டையில்  விழுந்த கொட்டு பளீர் என வலிக்கையில் தான் தெரிந்தது மணி 8.15 என்று...  அவசரம் அவசரமாக கையை கழுவி விட்டு புத்தக பையை முதுகில் போட்டுக்கொண்டு  கிளம்பினாள் அவந்திகா. வாசலில் அப்பா  தவசி மாமாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.


  
"என்னம்மா  மருமகளே.. schoolகு   கிளம்பிட்டியா? உன் மச்சான் மாதிரி collegeஅ கட்டடிக்காம நீயாச்சும் ஒழுங்கா படிம்மா.." என்று  மாதவன் மச்சானைப் பற்றிப் பேச்சை  எடுத்தார் மாமா.  கண்ணை சுருக்கிக் கொண்டு கன்னத்தில் குழி தெரியும்படி குறுநகை புரிந்தாள் அவந்திகா. பார்வை பாதையில் இருந்தாலும்  வீட்டு வெளிச் சுவரைத் தாண்டும் வரை அவர்கள் பேசை கேட்டுக் கொண்டே சென்றாள்





" உங்க மருமகன் சரி இல்ல மாப்ள!. collegeஅ  ரொம்ப cut அடிக்குறான் நீங்க கொஞ்சம்  சொல்லி திருத்தக்கூடாதா? ஒழுங்கா படி. இல்லன்னா பொண்ணு தர மாட்டோம் னு சொல்லி மிரட்டுங்க. என்ன  நான்  சொல்றது?"  என்று கனீர் குரலில் சிரித்தார் தவசி மாமா.





  "அதெல்லாம் இருக்கட்டும் மச்சான்.. படிக்குற புள்ளைங்களை பக்கதுல  வெச்சுட்டு அவங்க கல்யாணத்த பத்தி பேசுனா 
அது  நல்லா இருக்கது பாருந்க.. இவ முதல்ல +2 முடிக்கட்டும். மாதவன் ஒரு நல்ல வேளைக்கு போகட்டும். அப்புறம் இத பத்தி நாம  பேசாம வெற யாரு பேச போறா?" என்று கர கரத்த தொண்டையுடன் சிரித்தார்   அவந்திகாவின் அப்பா இசக்கியப்பன்.


அப்பாவின் சிரிப்பொலி நிற்பதற்க்கும்  பஸ் வந்து நிற்ப்பதற்க்கும் சரியாக இருந்தது. பஸ்ஸில் உட்கார்ந்தவுடன்  மாதவன் மாமாவின் நியாபகம் தான் வந்தது அவந்திகாவுக்கு. திருவிழாவுக்கு மாமா
வாங்கித் தந்த கண்ணாடி வளையல் தன் கையில் இருப்பதை பார்த்தாள்.

 "ஏன்  இந்த மாமா எப்போ பார்த்தாலும் எதாச்சும் வாங்கி தந்துட்டே இருக்காங்க.ஓஹ். அவங்க தான  கல்யாணம் பண்ணிக்க போறங்க அதனாலயா இருக்குமோ? அப்போ மாமாக்கும் நான் எதும் வாங்கி  கொடுக்கணுமோ? ஆனா அப்பா தான்  நான் school முடிக்குற  வரைக்கும் மாமா ஊருக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாங்களே. போச்சு போ."  என்று மனதிற்க்குள்  வருந்திக் கொண்டாள் திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒன்பதாம் வகுப்பு மாணவி அவந்திகா அடுத்த நிறுத்ததில் வந்து ஏறினாள் மோனிகா. கையில்lunch bagஉடன் என்னருகில் வந்து உட்கார்ந்தவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி " தமிழ் டெஸ்ட்க்கு  படிச்சிட்டியா?" என்று.



lunchகு பிறகு முதல் வகுப்பில் கண்ணை கட்டிக் கொண்டு  

 வந்த தூக்கத்தை கட்டுப்படுத்தாததன் விளைவு இபோது புரிந்தது. "ஐயயோ! இந்த home work எப்போ டி குடுத்தாங்க?" என்று அதிர்ச்சியில் கேட்டாள் அவந்திகா
 





தண்டனையை தனியாகப் பெற போவதில்லை என்ற தைரியம் பிறந்தது மோனிகாவுக்கு. இன்று  முதல் வகுப்பு தமிழ் peroid. பொறியில் மாட்டிய எலி போல  அவந்திகா வின் மனது பதைபதைதது.



மாட்டிகொண்டால் என்ன பொய் சொல்லலாம் என்று 

ஒத்திகை பார்துக்கொண்டிருந்த போதுதான் மோனிகாவும்
 படிக்கவில்லை என்ற மன தைரியம் கிடைத்தது. 

அரை மணி நேரத்திலேயே பிரச்சனைக்கு முடிவு 
கிடைத்தது. ஆமாம். அவந்திகா மோனிகாவின் 
துணையுடன்  மட்டும் இல்லை.
மேலும் 10பேர் துணையுடன் வகுப்பிற்கு வெளியே நின்றாள். Punishment பல்லைக் காட்ட வைத்தது.

" உங்க கூட படிக்குற புள்ளைக தான இவங்க எல்லாம். அவங்க படிச்சுட்டு வரும்போது உங்களுக்கென்ன? நில்லுங்க வெளியிலேயே.  அப்போ தான் புத்தி வரும்" என்று ஆவசத்துடன் அல்றினார் Tamil Teacher.


  "அப்போ ஏன் உள்ள வெச்சு பாடம் நடத்துறீங்க" என்று  

மூடிய வாய்க்குள் முனங்கினாள் மோனிகா.  
 அவளுக்கு  இடப்புறம் நின்றிருந்த அவந்திகாவும் 
வலப்புரம் நின்றிருந்த  நர்மதாவும் இதைக் கேட்டு  மூக்கை சொறியும் சாக்கில் 
முகத்தை மூடிக் கொண்டு சிரித்தார்கள்.





கொஞ்சமும் வெட்கம்  மானம் இல்லாம
ல்
 நின்றிருந்த அவந்திகாவுக்கு அப்போது 
 தெரியாது, இனி அவள்   கண்மையும் 
சிவக்கும் அளவிற்க்கு  வெட்க்கப்பட போகிறாள் என்று.




Episode -2


மோனிகா அடித்த நக்கலுக்கு நகைத்துக் கொண்டிருந்த அவந்திகாவிற்கு அடுத்த  class social science என்பது நினைவிற்கு வந்தது. அவளைப் பொறுத்தவரை social sccience என்பது  பாகற்காயை வேப்பெண்ணையில் வதக்கி பழுக்காத எலுமிச்சைக்காயை பிளிந்து பத்து நாட்கள் கழித்து  வெந்தயத்தை போட்டு தாழித்து  செய்து வைத்த பொறியல். அத்தனை கசப்பு.


அவளது புத்தகத்தின் முதல் பக்கதில்

"Untouchability is a Sin
Untouchability is a Crime
Untouchability is Inhuman
"

என்பது
"@ History is a Sin
Civics is a Crime
Geography is Inhuman@"
என  sketch pen கொண்டு மாற்றப்பட்டிருக்கும். 
அத்தனை  வெறுப்பு இருந்ததால் அவள் கொடுக்கப்பட்ட
homeworkஐ முடிக்கவில்லை. ஆனால் அது மட்டும்
காரணம் இல்லை.அது 2000 ஆவது  வருடம் என்பதால் 
பள்ளி இறுதி ஆண்டு விழாவிற்கு அனைத்து குழந்தைகளும் 
"அந்தி மழை மேகம் நெஞ்சில் மழை தூவும்.." 
இந்த பாட்டுக்கு  நடனம் ஆடுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு dance practise க்காக அன்றைய social science ஒதுக்கப்பட்டிருந்தது.அதனால் அவந்திகா அடி வாங்குவதில் இருந்து அன்றைய தினம் தப்பித்துக்கொண்டாள்.

                





 திட்டமிட்டபடி பள்ளியில் பாடல் ஒலிக்கையில் அனைவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டம் போடுவத்ற்கு சொல்லியா தர வேண்டும் அவந்திகாவிற்கு. அதென்னவோ படிப்பைத் தவிர மற்ற அனைத்திற்கும்  உள்ளிருந்து ஓர் உற்சாக உணர்ச்சி ஊற்றெடுத்துக் கொண்டு வருகிறது அவளுக்கும் மோனிகாவிற்கும்,நர்மதாவிற்கும். dance சொல்லித் தந்த கயல்விழி teacher இளமையாகவும் உற்சாமாகவும் மட்டும் இல்லாமல் வகுப்பில் அனைவரின் மீதும் அன்புடன் இருப்பதாலும்   அவர்கள் இருவருக்கும்  அவர் மீது தனி பிரியம். கயல்விழி teacher போல கையை காலை ஆட்டி ஆட்டிஆடியதில் காலையில்  சாப்பிட்ட இட்லி தந்த energy தீர்ந்தது. பிடித்துவிட்ட வேலை என்பதால் களைப்பையும் கண்டுகொள்ளாமல் கையை சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தாள். " ஏய்... தாகமா இருக்குதுடி தண்ணி குடிக்கலாம் வாடி" என நச்சரித்தாள் நர்மதா.

நாளொன்றிற்கு குறைந்தது இரு முறையாவது 

"ஏய்..." எனத் தொடங்கி "வாடி" என முடிக்கும் மோனிகாவின் punch dialogue அவந்திகாவினுள் குடியிருக்கும் குட்டி மிருகத்தை கொலை செய்யத் தூண்டும். அதையும் கண்டுகொள்ளாமல் அடிக்கடி நச்சரிப்பதே நர்மதாவின் வேலையாக இருக்கும்.
 



 " மிஸ்ஸ்... கொஞ்சம் தண்ணி.."  என்று கேட்டு தண்ணீர் தொட்டி இருக்குமிடத்தை நோக்கி விரைந்து சென்றார்கள்.   தண்ணீர் தொட்டிக்கு அருகில் சென்றதும்  அங்கிருந்து   மோனிகா இரண்டு கையையும் நீட்டிக்கொண்டு ஆடிக்கொண்டே ஒற்றைக் காலை தூக்குகையில் தடுமாறி விழப் பார்த்ததை மோனிகா வாயில் டம்ளரை வைத்துக் கொண்டே  அவந்திகாவிடம் சுட்டிக் காட்டினாள். சிரித்துக் கொண்டிருந்த  அவந்திகா   அடுத்த வகுப்பான பத்தாம் வகுப்பிலும் மாணவர்கள் நடனம் ஆடுவதைக் கவனித்தாள்.


அவள் அந்த வகுப்பறையை எதேச்சையாக 

நோக்குவது அதுதான் இறுதி முறையாக 
இருந்தது. ஆம்.. அவள் மனம் அடிக்கடி 
அந்த பக்கம் பார்க்க சொல்லி ஆணையிடும்
 காலம் ஆரம்பித்து விட்டது..
                

ஆயுள் முழுவதும் நினைவைல் நிற்கும் உருவத்தை அக்கணத்தில் கண்டுவிட்டாள். அவந்திகா  தன் இதயத்தில் ஒரு ஒலியை உணர்ந்தாள். இதயம்  உருகி ரத்த நாளங்கள் வழியாக இரப்பைக்குள் செல்வது போல இருந்தது  . அக்கணத்தில் அவள்  கன்டது மாதவன் மாமாவைத் தான் என்றே நம்பி விட்டாள்.. 


அவரை போன்றே பெரிய உதடு.. வண்டு போன்ற பெரிய  கண்கள். நல்ல அழகான  தோற்றம்.  தனக்கும் அவனுக்கும் ஓர் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போன்று உணர்ந்தாள்..  அளவு கடந்த அன்பு அவன் மீது வந்தது.மாதவன் மாமா தன்னை காண இன்னோர் உருவம் கொண்டு பத்தாம் வகுப்பில் சேர்ந்திருகிறாரோ என்று தொன்றியது.


"பெரு நாளாம்...." என்ற அந்த பாடலின் 

வரிக்கு அவன் தன் தலையை குலுக்கிய 
போது நெற்றி மீது இருந்த தலை முடியும் 
குலுங்கியதை கண்டாள்.  அடுத்தடுத்து 
அவன் அசைத்த சிறு சிறு அசைவுகளும் 
அவளுக்கு பூரிப்பு ஊட்டியது. பிடித்த 
பொருள் எதிர் பாராமல்  பிறந்த நாள் பரிசாக
 கிடைத்ததை போல ஓர் உணர்வு. மாதவன் 
மாமாவை போலவே சங்கு கழுத்து.சாந்தமான அவன் முகம்  அவளையும் மறந்து  அநிச்சையாக அவள் விழி  சிமிட்டுவதையும் மறக்க வைத்தது.. ஒறு வேளை மாமா என்னிடம் விளையாடுவதற்காக தான் school uniform போட்டு கொண்டு மீசையை எடுத்துவிட்டு சின்ன பையன் போல வந்திருப்பாரோ?அப்படி மட்டும் இருந்தால் மாமாவின் கையை ஓடி போய் பிடித்திட வேண்டும் என மனதிற்குள் கற்பனை செய்து கொண்டாள்.. "அப்போ மாமா எனக்கு கண்மை வாங்கி தர்றேன்னு சொல்லி இருந்தாங்களே.. அதை வாங்கிட்டு வந்திருந்தா எப்டி இருக்கும்.. ஐய்ய்ய்.. அப்டின்னா இப்போ ஜன்னல் வழியா மாமா கையை நறுக்குன்னு கிள்ளி விட்டுட்டு ஓடி போயிறணும்.. ஐயயோ அபோ அவங்க துரத்திட்டு வந்தா என்ன பண்ணனும்னு யோசிக்கும் பொது "ஏய் வா டி போலாம்" கடுப்பை கிளப்பும் அதே டயலாக் இப்போது கற்பனையை குலைத்தது.

நர்மதா தண்ணீர் குடித்து விட்டு திரும்பிச் செல்ல அழைக்கையில் தான் அவந்திகா உணர்ந்தாள் அது மாமா அல்ல மற்றொருவன் என்று.

தண்ணீர் குடித்து முடித்துவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் வகுப்பில் அவனது இருக்கையை  மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டாள். அடுத்தடுத்து வரும் நாட்களில் அவளுக்கு பத்தாம் வகுப்பின் மீது அவளையும் அறியாமல் கண்கள் மற்றும் கவனமும் மட்டுமல்ல கழுத்தும் சேர்ந்து திசை திரும்பியது.

சூரியகாந்திப் பூ சூரியனை நோக்குவது போல அவன் வகுப்பறையை 

பார்த்துக் கொண்டே நடப்பது அவளது வழக்கமானது. பார்க்கும்போதே பரவசமடையச் செய்யுமளவிற்கு சாந்தமான முகம். அவன் யார் என்னவென்று தெரிந்துக் கொள்ள துடித்தாள். ஆனால் அவள் ஒன்பதாம் வகுப்பு, அவன் பத்தாம் வகுப்பு என்பதால் அது அவளுக்கு கடினமாக இருந்தது.
 பள்ளிக்கு காலையில் வருவதே அவனைப் பார்க்கத்தான்  என்ற நிலைக்கு வந்துவிட்டாள். மதிய உணவுக்குச் செல்லும்முன் அவனைப் பார்த்தாள் மட்டுமே அவளுக்கு பசி அடங்கும். மாலையிலும் ஜன்னலைப் பார்த்தவாறே சென்று கொண்டிருந்தாள்

நார்மலாக இருக்கும்போதே homework செய்யாத அவந்திகா நாணத்தில் சிக்கிய பின்பு என்ன செய்வாள்? புத்தகத்தை எடுக்கும்போதெல்லாம் 

அவனது நினைப்பு தான் வந்தது.அம்மா அழைத்ததும் தெரியவில்லை. அப்பா வந்ததும் தெரியவில்லை. அட.. ஆள்காட்டிவிரலில் கொசு கடித்தது கூட தெரியவில்லை. பசி எடுத்தது.. சாப்பிட முடியவில்லை. தூக்கம் வந்தது தூங்க முடியவில்லை.முயற்சி செய்து தூங்கிய போதும் முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை முழிப்பு வந்தது.உடல் நடுங்கியது. இமைகள் வலித்தது.

விடிந்த பின்பு தான் தெரிந்தது.. மலேரியா காய்ச்சல்

என்று. பேனா சைஸுக்கு ஒரு ஊசியை
போட்ட டாக்டர் பத்து நாட்கள் பள்ளிக்கு லீவு போட சொன்னார்.ஐயயோ..சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க
மட்டுமல்ல. துளி கூட சிரிக்க முடியவில்லை.
பத்து நாட்களும் கலர் கலர் மாத்திரை மற்றும் கண்ணை மூடிக்கொண்டுக் குடித்த மருந்திலும் படுத்த படுக்கையாய் கிடந்து ஓடிவிட்டன.


மறு நாள் பள்ளியில் நலம் விசாரிப்பு பயங்கரமாக நடந்தது. "ஏய்..அக்கா classக்கு போலாம் வாடி" 

நர்மதாவின் அதே கடுப்புfying வார்த்தைகள்.போனால் போகட்டும் என்று அவளுடன் கிளம்பி அந்த பத்தாம் வகுப்பிற்கு சென்றாள்.. அப்போது தான் மறுபடியும் அவளுக்கு அந்த பையனின் நினைவு வந்தது.நர்மதாவின் அக்கா நளினியும் அந்த வகுப்பு தான் என்பது அப்போதுதன் அவளுக்கு தெரிந்தது.





 



நர்மதா "ஏய் வாடி" என அழைப்பது இப்போது அவளுக்கு பிடித்திருந்தது. நர்மதா தெலுங்கு குடும்பத்து பெண் என்பதால் அவளும் அவளது அக்காவும் தெலுங்கில் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தனர்.. வழக்கமாக கடுப்பாகும் அவந்திகா இப்போது அதை கண்டுக்கொள்ளவும் இல்லை. காண வைத்திருந்த இரண்டு கண்களும் தான் இப்போது அவன் மீது இருக்கிறதே.வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.நர்மதா எப்போது அழைத்தாலும் அடிக்கடி சென்று கொண்டிருந்தாள்

மாதவன் மாமாவின் புகைப்படத்தை எடுத்து வந்து

 நர்மதாவிற்கும் அவள் அக்கா நளினிக்கும் காட்டி
"ஏய்.. இந்த போட்டவுல இருக்குறவனும் அந்த
 ஜன்னலோரம் இருக்குற பையனும் ஒரே மாதிரி  இருக்குறாங்கள்ல்ல..." என்று கன்னக்குழியில்  சிவப்பு வண்ணம் தெரிய கேட்டாள்.

"ஹேய் ஆமாப்பா... அதே மாதிரி தான் இருக்காங்க.. ஓஹ் இது தான் உங்க மாமாவா?" என்று கேட்டாள் நளினி.


"ஆமா.. அந்த பையன் பேர் என்ன?" எனக் கேட்டாள் ஆர்வத்துடன்

"அவன் பெயர் மதன் சையது அலி" என்று நளினி சொல்லி முடித்தவுடன் மனதிற்குள் இதயத்துடிப்பால் அந்த பெயரை எழுதிக்கொண்டாள் அவந்திகா

 Episode-3









மதன் இது தான் அவந்திகாவிற்கு 
பிடித்த பெயர் தற்போது. அவனைப் பற்றி 
நினைவு தோன்றும்போதெல்லாம் அவளையும் 
அறியாமல் அவளுக்கு சிரிப்பு வந்தது.




 





கதை 

திரைக்கதை 

வசனம் 

தயாரிப்பு   
    மதன்    

என்று  Title song வரும் mega serialஐ


 அந்த பெயருக்காகவே பார்க்கத் 

தொடங்கினாள்.வழக்கமாக வகுப்பில் 

attendance எடுக்கையில் வாசலில் ஆயா 

சுத்தம் செய்வதை   வேடிக்கை பார்ப்பதை

 நிறுத்திவிட்டு மல்லிகா ,மதன்கோபால்..
என்று தன் வகுப்பு மதன் பெயரையும் காது 
கொடுத்து கேட்டு யாருக்கும் தெரியாமல்
 ரசித்துக் கொண்டாள். மதனகோபால் என்ற
பையன் லீவு என்றால் அவன் பெயரை இரண்டு முறை அழைக்கும்போது பேனாவை கடித்தபடி ரசித்து கொண்டாள்



அடுத்த வருடமாவது தினமும் home work ஐ சரியாக முடித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும்  என நடக்காத கதையை மனதில் வளர்த்து நம்பிக்கை கோட்டைக்கு அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்த போது "ஏய் வாடி..தண்ணிக்  குடிக்கலாம்" என அழைத்தாள் நர்மதா



போகும் வழியில் வழக்கம் போல பத்தாம் வகுப்பு
ஜன்னலை பார்த்துக்கொன்டேதான்  சென்றாள்.
ஆனால் இப்போது அவள்  இதயம் சாதரணமாகத்தான்
 துடித்தது.வாயும் இளித்துக் கொண்டிருக்காமல்
வழக்கம் போலத்தான்  இருந்தது. ஏனென்றால்
அன்று பத்தாம் வகுப்பு பொதுதேர்வு ஆரம்பமாகி
இருந்தது.மதன் பரீட்சைக்கு சென்று விட்டான்.



இரண்டு நாட்கள் கழித்து பத்தாம் வகுப்பில் சலசலப்பு சத்தம்.அன்று தேர்வு இல்லை.திங்கள்  கிழமை பரீட்சைக்கு படிப்பதற்காக
அவர்கள் அனைவரும் வகுப்பிற்கு
வரவைக்கப்பட்டிருகிறார்கள் என நர்மதா  அவந்திகாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.  பென்சில்  சீவிக் கொண்டிருந்த அவந்திகாவிற்கு
டபக்க் என  மதனை பார்க்கத் தோன்றியது.
நர்மதாவை அவளாகவே கூட்டிகொண்டு
பத்தாம் வகுப்பிற்கு சென்றாள்.

"இல்லக்கா நீங்க எப்டி exam எழுதியிருக்கீங்கனு கேட்டுட்டு போக வந்தேன் கா..." என்று அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே நர்மதாவின்  அக்காவிடம்  பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் கழுத்து முப்பது  டிகிரி கோணத்தில் திரும்பி நின்றபடி இருந்தது.கண்கள் சிமிட்டாமல் மதனையும் அந்த அக்காவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.




வலது கையால் reynolds பேனாவின் நுனி 
வாயில் கவ்விக் கொண்டு  இடது கையை 
பெஞ்சின்  பின் புறம் போட்டுக்கொண்டு 
ஜன்னல் பக்கமாக பார்த்து கொண்டிருந்தான்
 மதன். பின் பேனாவைக் கையில்  எடுத்து 
சுற்றிக் கொண்டே யாரோ தன்னை
 பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றி திரும்பிப் பார்க்கும்போது அவந்திகா திரும்பிக் கொண்டாள்.திருட்டு ராஸ்கல் அவந்திகா திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வகுப்பை விட்டு வெளியே
வரும்போது அவள் சரவணன் அண்ணாவைப் பார்த்து  குறுமுறுவல் புரிந்தாள்.சரவணன்  அவந்திகாவின் அண்ணன் ஆனந்தின் நெருங்கிய நண்பன். அவனும் அவந்திகாவை பார்த்து சிரித்தான்.சட்டென ஏதோ நினைவு  வந்து திரும்பிய அவந்திகா "சரவணன் அண்ணா..உங்க கிட்ட 10th கோனார் நோட்ஸ் இருக்குதாணா?" என்று கேட்டாள். குனிந்து மேஜையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து   "இந்தா பா" என அவந்திகாவிடம்  கொடுத்தான்.
 வெளியே வந்து தன்னுடைய வகுப்பில்
 நுழையவும் மோனிகா  "என்ன டி ஈஈஈ னு 
இளிச்சுகிட்டே இருக்குற?" என்க் கேட்கும் போது
 தான் புரிந்தது அவள் தன்னையும் அறியாமால்
சிரித்துக் கொண்டிருந்தது. சமாளிப்பதற்காக
 "இல்ல டி.. 10th std தமிழ் நோட்ஸ் கெடைச்சுடுச்சு டி..."
என்று சொன்னாள்.. 

அப்படியும் இப்படியுமாக பல நாட்கள்
 சென்றன. அப்பாடா... அதில் பரீட்சை
 நாட்களும் சென்றுவிட்டன. Social Science 
exam அன்று  "என்னடா வாழ்கை இது?" 
என்று எரிச்சலுடன் சென்றாள்.ஆனால்  
கடைசி மூன்று வினாக்களுக்கு
 விடையளிக்கும் போது மட்டும் 
பல்லைகடித்து கொண்டு எழுதினாள்.
விரல் நுனியில் பேனா மை  கசிந்தது 
தெரிந்தும் அதைக் கூட துடைக்காமல் 
கட கடவென  எழுதித் தள்ளினாள்.. 
ஆனால் அது அத்தனையும் தப்பு 
என்பது அவளுக்கு தெரியாது. பரீட்சை
 முடிந்ததும் துள்ளிக் குதித்துக்
கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.



"ரொம்ப நாளா பாப்பா கண்ணு சரியா தெரியலனு
சொல்லிட்டு இருக்காளே.. அவள ஆஸ்பத்திரிக்கு
கூட்டிடுப்போயேன்டா..." என்று அவந்திகாவின் அப்பா
ஆனந்திடம் கூறினார். " ம்ம்ம்.." என்ற பதில் மட்டும்
வந்தது அவள் அண்ணன் ஆனந்திடமிருந்து.
மறுநாள் கிரிக்கெட் விளையாடுவதாக ப்ளான் வைத்திருந்த ஆனந்திற்கு அப்பா பேச்சை மீற முடியாமல் வந்த கடுப்பை கருப்பு ரிப்பன் கட்டிய அவந்திகாவின் இரட்டை ஜடையின் மீது காட்டினான். ஒரு கையில் தட்டிலிருந்த  தோசையும்  மறுகையில் டிவி ரிமோட்டும் வைத்திருந்த அவந்திகா ஜடையை பிடித்து
 இழுத்த அவள் அண்ணனை ரிமோட்டை கொண்டு எறிந்தாள்.  அப்புறம் வழக்கம் போல அவள் அண்ணனும் கையில் கிடைத்த டம்ளரைக் கொண்டு எறிய.. அம்மா வந்து இரண்டு
 பேரையும் அடிக்க... வழக்கமான சண்டை தான்.. 
ஓரு வழியாக கண்மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததில் பார்வை குறைபாடு இருந்தது தெரிய வந்தது. குதிரைக்கு கடிவாளம் இட்டது போல அவந்திக்கவிற்கு குண்டாக ஒரு மூக்குகண்ணாடி மாட்டப்பட்டது.

இரட்டை  ஜடை இம்சை இல்லாமல் ஒருமாதம் ஓடிய பின்பு  அவந்திகா புது புத்தக பையுடன் பத்தாம் வகுப்பிற்குச் சென்றாள்.  அதில் மதன் இருந்த ஜன்னல் ஓரத்தில் சந்திரன் உட்கார்ந்திருந்ததைப்
பார்த்து எரிச்சல் வந்தது.எப்போதும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த  அவந்திகாவிற்கு பார்வை குறைபாட்டினால்  இரண்டாவது பெஞ்சில்  இடம் கிடைத்தது.  

பத்தாம் வகுப்பு என்ற பயத்தினால் தினமும் homework
ஒழுங்காக முடித்து வந்தாள்.தமிழ் பாடம் படிக்கும் போது  சரவணன் அண்ணாவிடம் வாங்கி வந்த கோனார் நோட்ஸை எடுத்து படிக்கலாம் என எடுத்து பார்த்தாள். அந்த புத்தகத்தில்சரவணன் என அட்டைப்பக்கத்தில் இருந்தது.புத்தகத்தை சரவணன் அண்ணாவிடம் வாங்கிய அன்று நடந்த காட்சியை மட்டும் தான் புரட்டிப் பார்த்தாள்.புத்தகத்தை புரட்டவில்லை.படிக்க்கலாம் என எடுக்கப்பட்ட முடிவுக்கு முடிவு கட்டப்பட்டது.  

கடவுள்வாழ்த்து படித்து வர சொன்ன அன்று மதனை பற்றி கனவு மட்டும் கண்டு வந்து நின்றாள்.  அன்றும் அவளால் மதனைக் காணாமல் இருக்க முடியவில்லை.மதன் என காற்றில் கண்களால் எழுதினாள்.  ஊக்கமுடைமை அதிகாரம் அன்று சொல்லிக் கொடுத்துக்  கொண்டிருந்தார் தமிழ் வாத்தியார் தன சீலன்."எப்போ டி 11th std start ஆகும்.உங்க அக்கா எப்போ வருவாங்க?" என
 அர்த்தமில்லாத அக்கறையுடன்  நர்மதாவிடம் கேட்டாள்.பக்கத்தில் இருந்த மோனிகா " ஏய்ய்ய்ய்.." என்று நக்கலாய் இழுத்துக் கொண்டே கேட்ட போதுதான் நர்மதாவிற்கும் அர்த்தம் புரிந்தது..இருவரும் கேலி செய்ய..சிவந்தது அவந்திகாவின் கன்னம்.
 " ஏய் போடி.." என கையில் வைத்திருந்த தமிழ் புத்தகத்தால்
  மோனிகாவை அடித்தாள். எதிர் பாராமல் அடி வாங்கிய
அதிர்ச்சியால் மோனிகா பளீர் என அவந்திகாவின் முதுகில்
 அடித்தாள்.அதையும் பொருட்படுத்தாமல் அவந்திகா இளித்துக்
 கொண்டே இருந்தாள்.


வீட்டிற்கு வந்த பின்பு இன்றாவது படித்தே தீர வேண்டும் என கோனார் நோட்ஸை எடுத்துப் பார்த்தாள். அதில்  அவளுக்கொரு ஆச்சர்யமான விஷயம் காத்துக் கொண்டிருந்தது. ஊக்கமுடைமை என தலைப்பு.அதன் பக்கவாட்டில் மதனின் கையெழுத்து. M capital  letterலும் மற்றவை small letterலும் எழுதப்பட்டு  t ன் குறுக்கே உள்ள கோடு நீட்டி விடப்பட்டிருந்தது.பெயரின் கீழே பாதியிலிருந்து ஒரு கோடு கீச்சப்பட்டிருந்தது .கோட்டின் கீழே  இரண்டு புள்ளி.இத்தனையையும் ஈஈ எனப் பார்துக் கொண்டே இருக்கும்போது பிடரியிலிருந்து பளார் என ஒரு கொட்டு..திரும்பி பார்க்கையில்  "படிக்கும்போது படிக்கிறத விட்டுட்டு என்ன பக்கத்து வீட்டு பாட்டு கேட்டு பல்லக் காட்டிட்டு சிரிச்சுட்டு இருக்குறியா?" என அவந்திகாவின் அம்மா கேட்டுவிட்டு போன பின்பு படிக்கலாம் என முடிவெடுத்தாள்

மறுநாள் தமிழ் periodஇல் வகுப்பில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
 ஊக்கமுடைமையின் பத்து குறள்களும் பிழையின்றி அவந்திகா
 ஒப்பித்தாள்.தமிழ் வாத்தியார் அதை கேட்டுக்கொண்டே
கடைவாய்ப் பல்லில் மாட்டிக் கொண்ட காலை சாப்பாட்டை 
நாக்கால் எடுக்க முயற்ச்சித்ததைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. எனவே கண்ணை மூடிக் கொண்டு கவனம் சிதறாமல் கட கட வென ஒப்பித்தாள்.அனைவரும் வாயைத் திறந்து பார்க்க மோனிகாவும்
நர்மதாவும் மட்டும் வயிற்றெரிச்சலுடன் பார்த்தனர். தமிழ் வாத்தியரான   தன சீலன் சாருக்கு ஒன்பதாவது வகுப்பிலிருந்த அவந்திகாவின்  படிப்பைப் பற்றி தெரியாததால் "ப்ரமாதம் ப்ரமாதம். திக்காம அப்டியே  சொல்லிடியே. நீ தான் ஒன்பதாவது வகுப்பில் topperரா.?" எனக் கேட்டார். அவந்திகாவிற்கு பஹீர் என இருந்தது. நர்மதாவிற்கும் மோனிகாவிற்கும் பளீர் என சிரிப்பு வந்தது.




வகுப்பு முடியும் வேளையில் தன சீலன் சார் "நாளைக்கு என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ!? எல்லாரும் அவந்திகா மாதிரி பிழை இல்லாமல்  இந்த திருக்குறளை
ஒப்பிக்கணும்"னு சொல்லி விட்டு போய்விட்டார். சூடான
வாணலியில் பாப்கார்ன் துள்ளுவது போல துள்ளிக் கொண்டு இருந்தது அவந்திகாவின் மனம். கடமையை செய்ததால் கிடைத்த இந்த பாராட்டு அவளுக்கு ஊக்கத்தை கொடுத்தது. வாழ்க்கையில்  ஏதோ ஒன்று கற்றுக் கொண்டது போல  தோன்றியது.உழைப்பு, பாராட்டு இவை இரண்டில் ஒன்று வந்தால் மற்றொன்று தானாக வரும் எனப் புரிந்துகொண்டாள்.


மறு நாள் காலையில் பஸ் வருவதற்கு அரை மணி நேரமே இருப்பது தெரிந்தும் நகத்திற்க்கு பாலிஷ் பண்ணிக்கொண்டிருந்தாள் அவந்திகா.வீட்டில் பூத்திருந்த ரோஜா முழுதாக மலரும் முன் மண்டையில் எடுத்து சொருகிக் கொண்டாள்.இன்று பதினோறாம் வகுப்பு பள்ளிக்கு ருகிறார்கள்
 என்பதால் பளீர் எனச் சென்றாள்.




 
பத்தாம் வகுப்பு முடிந்ததுமிருந்த மூன்று மாத விடுமுறையில்  வீட்டிலேயே இருந்து அவன் சற்று நிறமாக வருவான் என நினைத்துக்கொண்டே வந்த அவந்திகா கிரிக்கெட் விளையாடி கருத்து வந்த மதனையே பார்க்க நேரிட்டது.வகுப்பை அவன் கடந்து சென்ற அந்த ஒரு நொடி இவள் மனதில் வெகு நேரம்  நின்று கொண்டிருந்தது.


மாலை 5 மணிக்கு கூடைப்பந்து விளையாட்டு விளையாடி கொண்டிருந்த அவந்திகா வியர்வையில் முகம் கருத்து போய் இருந்ததையும் கண்டுகொள்ளாமல் முழுமூச்சுடன்  விளையாடி கொண்டிருந்தாள். சட்டென "வலப்புறம் திரும்பி பாரடி!!!.." என மூளை கண்களுக்குக் கட்டளையிட்டது.மதன் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தான். திரும்பி பார்க்கையில் பார்வையில் அவனை பதிய வைத்தாள்.  பந்தை தவறவிட்டாள். "ஒரு நிமிஷம் டி. தண்ணி குடிச்சுட்டு  வர்றேன்." என தண்ணீர் குடிக்கப் போகும் சாக்கில்  துப்பட்டாவால் வியர்வையை துடைத்துக் கொண்டாள். குறு குறு கண்களும் குழி விழுந்த கன்னமும், சிவந்தன.

"hey come on come on..." என கையைத் தட்டிகொண்டே
குதித்து குதித்து விளையாடினாள்.ஒரு வழியாக அவள்
நோக்கம் நிறைவேறியது.மதன் அவளையே உற்று
பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பது தெரிந்தும்
தெரியாதது போல நடித்தாள். ஆனால் அவள் குறுநகையும் குனிந்த தலையும் அதை காட்டிக்கொடுத்ததோ இல்லயோ,கையில் வந்து கீழே தவறி விழுந்த பந்தும் முன் வரிசைபல்லும் காட்டி கொடுத்தது.அவள் மதன் தன்னை பார்த்ததை மட்டும் தான் அறிந்தாள்.


துள்ளிக் குதித்த அவந்திகாவுடன் கூடவே சேர்ந்து குதித்த அவளது துப்பட்டா, இரட்டை ஜடை, "come on" என கூறிக்கொண்டே ஒன்றுடன் ஒன்று தட்டி கொண்டிருந்த இரண்டு கரங்களில் ஒன்று அந்த ஜடையை தூக்கிமுதுகுப்புறமாக போட்டது.மறு கை நெற்றி வேர்வையை துடைத்தது.அவள் தலையில் இருந்து வாடிய ரோஜா ஒன்று கீழே  விழுந்தது. மூன்று முத்து வைத்த கொலுசு.  தலைக்கு பக்கத்தில் வரும்போது பந்தை தொடுவதற்கு முன் ஒருகையால்  மற்றொரு கையின் மணிக்கட்டிலிருந்த வளையலை கைமுட்டிக்கு  பக்கமாக தள்ளி விட்டாள்.கையின் அருகில் வரும் பந்தை பிடிக்கும்  முன் "ஊஊ" என உச்சரிப்பது போல இதழ்களை குவித்தவாறே  புருவத்தை தூக்குவதையும் , உதட்டை கடித்துக்கொண்டே  பந்தை தள்ளி விடுவதையும் வைத்த கண் வாங்காமல் மதன் ரசித்துகொண்டிருந்தது அவந்திகாவிற்கு தெரியாது





 Episode -4   



"ஞாயிற்று கிழமை 5 மணிக்கு... வாசலில் அவந்திகாவின் அம்மா அவளுக்கு தலை வாரிக்கொண்டே "எப்போ பார்த்தாலும் அதென்னடி அந்த போகோ சேனலையே பாத்துக்கிட்டு இருக்க? போய் புக்க எடுத்து படி...வர வர நீ படிப்புல அக்கறை வைக்குறதே இல்ல. அப்பா திட்டுவாங்க பாத்துக்கோ!" என திட்டிக் கொண்டிருக்கும் போது "மா..இவ எப்பவுமே படிக்கும்போது சிரிச்சுகிட்டே இருக்காம்மா.இவ கவனம்  படிப்புல இல்ல மா.பக்கத்து வீட்டு tvல தாம்மா." என முந்திக் கொண்டு வந்தான் ஆனந்த். "உன் வேலைய மட்டும் பாரு டா தேங்காத் துருவி வாயா.." என முறைத்துகொண்டே அவந்திகா கூறும்போது "டொக்க்க்" என ஒரு கொட்டு அவள் தலையில் அம்மா கையால் வாங்கிக் கொண்டாள்..  "ஆஆஆ" என அவள் கத்தி முடித்தவுடன் " அவன அப்படி கூப்பிடாதேனு எத்தன தடவ உன் கிட்ட சொல்லிருக்கேன்டீ" என அம்மாவின் அட்வைஸ் ஆரம்பித்தது. 








அவளுக்கு  இரட்டை ஜடை பின்னி முடித்த கேப்பில் ஆனந்த் ஓடி விட்டதால் அவந்திகாவின் கையிலிருந்த எண்ணை டப்பாவிடமிருந்து தப்பித்துக் கொண்டான். "அச்சச்சோ... நாளைக்கு exam க்கு படிக்கணுமே..இப்போ என்ன பண்றதுனு தெரியலயே?"  என யோசிக்கும் போது எதிர்பார்க்காமல் ஒரு விசை அவளை இடப்புறமாக  தலையைத் தள்ளியது. அவள் அண்ணன் "என்னையா தேங்காத் துருவி வாய்னு சொல்ற?உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன் பாரு.." என்று அவள் ஜடையை பிடித்து இழுத்ததன் விளைவு தான் அது.

கோபத்தில் கடுப்பான அவந்திகா கையில் கிடைத்த பொருளை தூக்கி வீசினாள். அது அவன் கையில் போய் விழுந்தது."ம்மாஆஆஆ..." என அவன் கத்தும்போது தான் தெரிந்தது அது  geometry பாக்ஸில் உள்ள compass என்று. 


நடு வயிற்றில் பட்டு தோலை கீறி சதையை கிழித்து உள்ளே உள்ள குடல் வெளியே தெரியுமளவிற்கு  ஒரு பெரிய காயம் ஏற்பட்டது போல தான் கத்தினான் அவன். ஆனால் அது அது மணிக்கட்டில் 3mm நீளத்தில் தோலைம் மட்டும் கீறி விட்டிருந்தது. "அய்யோ.. ம்மா பாருங்க மா இவள.. குத்திட்டா.. ஆஆஆ.." என் கூச்சல் போட, என்னமோ ஏதோ என பயந்து வந்த அவந்திகாவின் அம்மா கையில் இருந்த கரண்டியால் 2குறி தவறாத  பலத்த அடி, 3 குறி தப்பிய குட்டி அடி இவற்றைக் கொடுத்தார். "என்னை மட்டுமே அடிங்க.. அவன் மட்டும் என் ஜடையைபிடிச்சு இழுக்கிறான்.. அவன்ட்ட எதுவும் கேக்காதீங்க..போங்க... ம்ம்ம்ம்ம்.. அப்பா வந்ததும் உங்களுக்கு இருக்கு பாருங்க " என அழுதுகொண்டே அலமாரி ஓரத்தில் நின்று கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள்.  



கோபத்தோடு அவள் அண்ணனை பார்க்கையில் அவன் முகத்தை வலியில் துடிப்பது போல வைக்க மறந்து போயிருந்தான். "எவ்ளோ திமிர் இருக்கும் இவனுக்கு.. அப்பா வரட்டும்.. அப்போ இருக்கு பாரு.." என மனதிற்குள் நினைத்துக்கொண்டு "ஹூம்..ஹூம்ம்.. ஹாவ்ங்.." என ஏங்கி ஏங்கி மூச்சு முட்ட முயற்சி செய்தாள் வரவில்லை.. கண்ணீரைத் துடைத்தா
 அழுகை மறைந்துவிடும் என கண்ணீரையும் துடைக்காமல் அழுது கொண்டிருந்தால்.  Main  gate திறக்கும் போது அவள் அலமாரியின் பக்கத்தில் படுத்துகிடந்தாள்.அப்பா சத்தம் கேட்டவுடனே அழுகைகுரலின் சத்தம் அதிகரித்தது.வாசலை அம்மா திறந்ததும் "அப்பா.. அம்மாவை பாருங்க பா.. அடிச்சுட்டாங்க.. ம்ம்ம்.." என கையைத் தேடும்போது அடி எங்கே வாங்கினாள் என்பதையே மறந்து போயிருந்தாள்.. 



"ச்சர்ரிடா.. ச்சர்ரிடா...உன்னை சமத்து புள்ளையா இருக்கணும்னு அப்பா சொல்லிருக்கேன்ல.."என்று தன் மடியில் அவள் தலையை சாய்த்துவிட்டு காதோர முடியை கோதி விட்டு அவளை தூங்க வைத்தார். 
என்ன நடந்ததோ தெரியவில்லை.. சேவலும் குயிலும் மாற்றி மாற்றி கூவும் போது தான் தெரிய வந்தது பரீட்சை நாளைக்கு அல்ல. இன்று மதியம் என்று.. "ஐய்யயோ விடிஞ்சு போச்சே.." என பரப்பரப்பாக பள்ளிக்கு கிளம்பினாள் 
வட்டமான மைதானத்தின் நடுவிலிருந்த மேடை மீது அமர்ந்து மதிய நேர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தாள் அவந்திகா. காலையில் நடந்த  பனிக்கூட்டம் மைதானத்திலிருந்த புல்வெளியில் கால்தடம் பதித்துசென்றிருந்தது. வழக்கமாக இவற்றை ரசித்து பார்க்கும் அவந்திகா கண்கள் வரலாற்றுப் பாடத்தில் 7வது பாடத்தின் 4வது வினாவுக்கான விடையை வயிற்றுக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதால் படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது.

தூரத்திலிருந்த வாசலிலிருந்து ஒரு உருவம் நடந்து வந்து கொண்டிருந்தது. "ஐய்யோ.. எவளாச்சும் வந்துட்டு  போறா.உனக்கென்னடீ.குனிஞ்சு படிடீ" என மனசாட்சி கூறியது."அட சே.. சும்மா இருடி.பாத்தது தான் பாத்துட்டா. யாருனுதான் பாத்துட்டு படிக்கட்டுமே.நீ பாருடி செல்லக்குட்டி." என பேதை மனம் கூறியது. அப்போது தான் தெரிந்தது அது பெண் அல்ல பையன் என்று. அப்போ கண்டிப்பா யாருனு பாத்தே ஆகணும் என் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிந்தது அது மதன் எனத் தெரிந்தது. அப்ப்ப்ப்பா. எத்தனை சிரிப்பு அவள் முகத்தில். அதை அவன் ஓரக்கண்ணால் பார்த்ததை கண்ணாடி இல்லாததால் இவளால் உணரமுடியவில்லை.அதுவும் நல்லதுதான்.இல்லையெனில் யாரென்றே தெரியாததுபோல திரும்பிக்கொண்டிருந்திருப்பாள்.   



அவன் வகுப்பிற்கு திரும்பும் வரை அவள் கழுத்தும் திரும்பித்தானிருந்தது. அவளுக்கு மதன் தெரியவில்லை.மங்கலாக ஏதோ ஓர் உருவம் தான் தெரிந்தது. உயரமாக இருந்த அவன் தோற்றம், ஊதா நிறத்தில் இருந்த அவன் school bag, மற்றும் அடர்த்தியான அவன் தலை முடி, குத்துமதிப்பாக தெரிந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.  


"அவன் தான் போயிட்டானே..இப்பவாவது படி.." என மனசாட்சி சொன்னதும் படிக்க ஆரம்பித்தாள்.பென்சில் பாக்ஸை திறந்து பார்த்ததும் தான் தெரிந்தது ரப்பரைக் காணவில்லை என்பது. "ஐய்யய்யோ... இப்போ என்ன பண்றது" Groundடின் நடுவில் உட்கார்ந்து கொண்டு தூரத்து மரத்தடியில் உட்கார்ந்திருந்த மோனிகாவிடம் "ஏய்..ரெண்டு ரப்பர் வெச்சுருக்கியாடி" என கீச்சு குரலில் கத்தி கேட்டள்.அவளோ அங்கிருந்து இல்லை என் கையை மட்டும் அசைத்து காட்டினாள்.கண்ணாடி போடாத அவந்திகாவிற்கு அது ரப்பரை காட்டியது போல தெரிந்ததால் பொறுமையாக உட்கார்ந்து கொண்டாள் 


மதிய உணவை முடித்து விட்டு கையை துடைத்தவுடனேயே மோனிகாவிடம் நீட்டி "ரப்பர் குடு டி" எனக் கேட்டாள். "எரும..இல்லனு தானடி சொன்னேன்..."
"ஏய் எனக்கு வேணுமே டி." என உதட்டைக் குவித்து வைத்துக் கொண்டாள்.
" relax.. நான் +1 அண்ணா கிட்ட scale வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்.உனக்கும் சேத்து  eraser வாங்கிடு வர சொல்றேன் டி" என்று கூறிவிட்டு போனதும் தான் உதட்டை நேராக வைத்துக் கொண்டாள்.  


  


+1 A section இல் உட்கார்ந்து  நடு பக்கத்தில் உள்ள பாடத்தை படித்துக் கொண்டிருந்தாள்.குண்டு புத்தகம் என்பதால் நடு பக்கத்தில் உள்ளங்கையால் ஒரு தட்டு தட்டினாள்.அந்த சாய்ந்த மேஜையில் புத்தகம் வழுகிக் கொண்டே வந்தது. "படிச்ச படிப்பு தான் நிக்க மாட்டேங்குதுன்னு பாத்தா படிக்குற புத்தகம் கூட நிக்க மாட்டேங்குதே!" என புலம்பிக் கொண்டு மடியில் வைத்துப் படிப்பதற்காக புத்தகத்தை கையில் எடுக்கும் போது சிமிட்டி விழித்த அவள்  விழிகள் அடுத்த சிமிட்டலுக்கு மறுத்து மேஜையிலேயே  வெறித்து நின்றது. மேஜையில் மதன் அவன் பெயரை கிறுக்கி வைத்திருந்தான்.இல்லை இல்லை..இவள் பாஷையில் சொல்வதென்றால், இவள் இதயத்திலிருந்த பெயரை அவன் செதுக்கி வைத்திருந்தான்.இரண்டு நொடியில் இமைத்தவாறே இடது பக்கம் திரும்பி இதழை அகற்றி சிரித்துக் கொண்டாள் 
 "அவன் அந்தப் பெயரை மேஜையில் எழுதும்போது கீழ் உதட்டால் பல்லை அழுத்தி கொண்டு இருந்திருப்பானோ?வலது கையால் எழுதும்போது இடது கையை மேஜையின் மீது வைத்திருந்திருப்பானா இல்லை benchன் பின்னால் வைத்துக் கொண்டு காலை ஆட்டிக்கொண்டே எழுதியிருப்பானா?" இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கை அவள் முதுகைத் தட்டியது.நிமிர்ந்து பார்த்த போது மோனிகா  "படிச்சிடியாடி? பயமா இருக்கு எனக்கு" என புலம்பிக் கொண்டே வந்து பக்கத்தில் உட்கார்ந்தாள்.ரப்பர் வாங்கி தருவாள் என்பதால் அவள் மீது கோபம் வரவில்லை.தலையெழுத்தை எண்ணிக் கொண்டே  அந்த கையெழுத்தைப் பார்துக்கொண்டிருந்தாள். "இந்தா பிடி" என்ற குரலுடன் திடீரென ஒரு கை மோனிகாவிடம் ஸ்கேலை நீட்டியது."அப்றம்ம்ம்.. Eraser யாருக்கு?" எனக் கேட்ட அந்த குரல் வந்த திசையை  நோக்கிப் பார்த்த அவந்திகா அசந்து போனாள்.எதிரே நின்று கொண்டிருந்தது  மதன்.. 





Episode-5

 

பேனாவை கையில் ஆட்டிக்கொண்டே 
படித்துக்கொண்டிருந்த அவந்திகா 
மதனைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தாள்.
இத்தனை அருகில் அவனது உருவத்தை 
 பார்த்ததில்லை.சிமிட்டிக் கொள்ளாமல்
 கருவிழியில் விழுந்த அவன் பிம்பத்தை
 மேல் இமையும் கீழ் இமையும்
 ரசித்துக்கொண்டிருந்தன
."அப்றம் eraser....யாருக்கு?".இத்தனை
 தெளிவாய் அவன் குரலைக் கேட்டதுமில்லை.
காதணியும் அவன் குரலை கவிதையாய் ரசித்தது.




Copy அடித்து எழுதும்போது மாட்டிக்கொண்டு முழிப்பதைப் போல படார் என எழுந்துநின்று "எனக்குத்தான்..." என திடுக்கிட்டுச் சொன்னாள் புருவத்தைச் சுழித்துக் கொண்டே.இதழில் வழிந்த சிரிப்பை இடதுபுறமாக தள்ளி உதட்டைச் சுருக்கிக்கொண்டே அவளை ரசித்துப் பார்த்தான்.தன்னை மறைந்து நின்று ரசிக்கும்  கண்களை மனதிற்குள் ரசித்துக்கொண்டான். "இவன் விரலை அசைத்து பேசும்போது மட்டுமல்ல.விழியால் பேசும்போதும் அழகாய் இருக்கிறானே.."என வெறித்துப் பார்த்தாள். "ஐய்யய்யோ..இந்த eresarஐ வாங்கிட்டா அவன்பாட்டுக்கு குடுத்துட்டு டக்க்னு போய்டுவானே.. அச்சோ.."என மனதிற்குள் புலம்பும்போதுதான் தெரிய வந்தது அருகிலிருந்த நர்மதாவும் மோனிகாவும் அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்துகொண்டிருப்பது.


அவன் அழகை ரசிப்பது முடிந்தது.ஆனால்

 அவன் தன்னைப்பார்ப்பதை ரசித்திட
 முடியவில்லை.அவன் முகத்தைப்
 பார்க்காமல் கீழ் உதட்டை கடித்துக்
 கொண்டே ரப்பரைமட்டும் பார்த்தாள்.
ரப்பரில் இருந்த NATARAJ என்ற  
பெயர் அவளுக்கு MATHANRAJ எனத்தெரிந்தது.
உள்ளங்கையை நீட்டினாள் அவன் நடுவிரல்
 மற்றும் மோதிரவிரலின் நுனி மட்டும்
 அவள் உள்ளங்கையின் ஆயுள்ரேகையைத்தீண்டியது."THANKSS" எனச் சொல்லி வலது கையை நீட்டினாள். நுனிநாக்கினை மேலுதட்டின் மீது வைத்திருந்த மதன் அவளுடைய THANKSஐக் கேட்டதும் சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தமாகவே  சிரித்துவிட்டான். "ஹேய்ய்..அது சார் இல்லடி.ஏன் இப்படி பம்மிகிட்டு எழுந்து நிக்குற?" என நக்கலாய்க் கேட்டாள் நர்மதா."ஓய்ய்.எனக்குத் தெரியும்.நன் தண்ணிக்குடிக்க போகத்தான் எழுந்தேன்..போடி"எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.இத்தனையும் நடக்க 65வினாடிகள் தான் ஆனது.ஆனால் அதை அவள் அடுத்து எழுதிக்கொண்டிருந்த பரீட்சையில் முழுவதுமாக நினைத்துக் கொண்டிருந்தாள்.



அடிக்கடி அவள் அந்த eresarஐப் பார்த்து அன்று நடந்த 65 வினாடி அனுபவத்தை நினைத்துக்கொண்டாள்.அப்படியே அவளது பத்தாம்வகுப்பு பொதுதேர்வு நெருங்கிகொண்டிருந்ததால் கொஞ்சநாள் படிப்பில் கவனமிருந்தது.கண்கள் அவனைத்தேடுவதை நிறுத்தியிருந்தன.தேர்வு முடிந்து விடுமுறைக் காலமும் வந்தது.விடுமுறையில் எப்போதும் மாதவன் மாமா வீட்டிற்குச் செல்வது வழக்கம்.ஆனால் இந்த  முறை இல்லை என அவள் அப்பா சொன்னது வருத்தமாகத்தானிருந்தது.ஒரு முறையாக விடுமுறையும் முடிந்து பதினொன்றாம் வகுப்பும் ஆரம்பித்தது.பள்ளிக்குச் சென்ற முதல் நாளே அவள் கண்கள் அவனைத்  தேட ஆரம்பித்துவிட்டன.படிப்பை அலட்சியம் செய்வதையே லட்சியமாய்க் கொண்டிருந்தாள்."ம்மா..அதான் போன வருஷம் படிச்சுட்டேன்ல..அடுத்த வருஷமும் படிக்கணும்ல மா..இந்த ஒரு வருஷம் மட்டும் freeயா விட்ருமா.." எனக் கெஞ்சுவதையே வேலையாக போச்சு progress reportடில் கையொப்பமிடும்போது.




மதன் பன்னிரெண்டாம்  வகுப்பு என்பதால்
 அவன் படிப்பில் பிஸியாக இருந்தான்.அவன் வகுப்பறையிலிருப்பதைவிட தனியாக இருந்து
 படிப்பதையே விரும்பினான்.ஆகவே,
 அவன் அவந்திகாவின் பார்வையிலிருந்து
 தப்பிக் கொண்டான். 









Office room வாசலில் உட்கார்ந்து அவந்திகாவும் நர்மதாவும் கணக்குப்பாடம் படித்துக்கொண்டிருந்தனர்.மோனிகா ஓடி வந்து "ஏய் கோகிலாக்கா உன்னைக் கூப்பிட்டாங்க டி" என மெது வடையை மென்று கொண்டே வந்தாள். Clerk கோகிலா அக்காவிற்கு அவந்திகாவை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு சாக்லேட் கொடுப்பது வழக்கம்.அவந்திகா அவளிடமிருந்த வடையை பிடிங்கித் தின்றபடியே சென்றாள் அவந்திகா.  கடைவாய்ப்பல்  நொறுங்குமளவிற்கு கோபத்தில் அவளைப் பார்த்தாள் வடையில் பங்கு கிடைக்காத  நர்மதா."ஏய்.. லூசு.. தராம தின்னா தண்ணிக் கிடைக்காம விக்கலெடுக்கும்டி பாருடி" என முழி பிதுங்க முறைத்துக்கொண்டிருந்தாள் மோனிகா.காதிலேயே போட்டுக்கொள்ளாமல் குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தாள்.மைதானத்தில் கண்ணுக்குத் தெரிந்தவரையில் யாருமில்லாததால் உற்சாகமாக ஓடிச் சென்றாள்.



ஒடும் வேகத்தில் தோள்பட்டையில் சரிந்து விழுந்த
  துப்பட்டாவை சரிசெய்துகொண்டே ஓடினாள்
கூடைப்பந்தாட்டத்தில் ஆடிய ஆட்டத்தில்
 ஒற்றைக்காலில் 5முத்தும் மற்றொரு காலில்
 3முத்தும் கொண்ட கொலுசுகள்
 "சல்.. ச்சல்ல்..சல்..ச்சல்ல்.." 
என்ற இசையையும் இசைத்தது.
அவள் ஜடைப்பின்னல் முதலில் 
மேலும் கீழுமாகவும் பின் இடம் 
வலமாகவும் அசைந்தது.officeroom கும் 
லைப்ரேரிக்கும் இடையில் உட்கார்ந்து
 இயற்பியல் படித்துக்கொண்டிருந்த மதன்
 இமை தட்டாமல் ரசித்ததுதான் இத்தனையும்.
 அவள் ஜன்னல் வழியாக சாக்லேட் வாங்கிக்கொண்டு
 கோகிலா அக்காவின் கையை  கிள்ளி விட்டும் வந்தாள். இத்தனை குறும்பு தனம் மிகுந்தவள் தன்னிடம்  வந்து  பேசாமல்  இருப்பதேன் எனகுழம்பிக்கொண்டிருந்தான் மதன்.







மெதுவடையை வாங்கிக் கொண்டு குடுகுடுவென ஓடியவள் திரும்பிச் செல்லும்போது மெதுவகவேச் சென்றாள்.செருப்பிலாத காலில் கொலுசுச் சத்தம் தெளிவாகவேக்  கேட்டது.வெயில் தரையில் நடக்கும்போது கால் பெருவிரலை மேல் நோக்கி நிமிர்த்திக் கொண்டே நடந்தாள்.நர்மதாவின் தோளைப் பிடித்துஉட்காரும் வரையிலும் அவளுக்கே தெரியாமல் நோக்கிக்கொண்டிருந்தான் மதன்.மதனுக்கே தெரியாமல் மதனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் நர்மதா.




"ஏய்.. இப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?.." 
என நர்மதா கேட்டாள். "ஒரு அழகான மயில் 
 நடந்துச்சு டி" என தோளை ஆட்டிகொண்டே
 கூறினாள்."மரமண்ட...மதன்.. அங்க 
இருந்து உன்னதான்டீ பாத்துட்டு இருக்கான்"
 என அவன் இருந்த இடத்தைச் சுட்டிக் 
காட்டினாள். அவந்திகா பார்க்கும்போது 
அங்கு தெரிந்தது மதனுடைய முகமல்ல.
அவன் நண்பனின் முதுகு.தலையிலடித்துக்
 கொண்டு "ப்ப..இனி மதனைப் பத்தி 
எங்கிட்ட பேசாதே.." எனச் சொல்லிவிட்டு
 புத்தகத்தை வைத்து முகத்தை
 மூடிக்கொண்டு trigonometry theory
 ஐ மனப்பாடம் செய்வது போல நடித்தாள்.


இப்படியே அவள் தோழிகள் அவளை கிண்டல் செய்வது அதிகமானது.கும்பலாக வந்து கொண்டிருந்த  ஒரு கூட்டம் அவளையே உற்று நோக்கியது ஒருநாள்.அப்போது அவள் "ஐய்யயோ..முகத்துல பவுடர் அதிகமாயிடுச்சோ?!!!" என நினைத்துக்கொண்டாள்.ஆனால் அவர்கள் மதனை நோக்கிச் செல்லும்போது தான் புரிந்தது அவர்கள் மதனுடைய நெருங்கிய நண்பர்களாக இருக்ககூடும் என புரிந்துக் கொண்டாள்."டேய்... அவ தான்டா.." என அவன் நண்பர்களிடம் சொல்லியிருப்பானோ என கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள். "இருக்கட்டுமே..இவன் ஏன் இப்போவே எல்லார்ட்டயும் சொல்லிட்டு திரியுறான்?" என திட்டிக்கொண்டாள்.


அவன் நண்பர்கள் அவளை கடந்துசெல்லுபோது
 அவர்கள் பார்க்கிறார்களா இல்லையா
 என பார்க்க ஆரம்பித்தாள். இவ   
 ஏன் இப்படி பார்க்கிறா?மதனை
 தான் தேடுறாளோ என மதனைக் 
 கூப்பிட்டு பக்கத்தில் நிப்பாட்டிக்
 கொண்டனர்.இப்படியாக நண்பர்க
 வட்டாரத்திற்கு தெரிய வந்தது.




"ஏய் தெரியுமா?நேத்து +2 க்கு லாஸ்ட் டே பா.. சே.. நாமளும் அடுத்த வருஷம்  பிரியணுமே..." என வருத்தப்பட்டுகொண்டே சொன்னாள்  நர்மதா தண்ணீர் குடிக்கச் செல்லும்போது.படார் என அங்கேயே ஒரு நிமிடம் நின்று விட்டாள். "நீ மட்டும் போய் குடிச்சுட்டு வாடி.. நான் இங்கயே நின்னுக்குறேன்.." என  அங்கேயே நின்றுகொண்டாள்.நர்மதா வலதுபுற திருப்பத்தில் சென்று தண்ணீர் குடிக்கச் சென்று விட்டாள். 
நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்த குட்டைச்சுவரில் கைவைத்து அவள் போன வழியை வெறித்து பார்த்துகொண்டிருந்தாள். "அவனை  அடுத்து எப்போ பார்க்க முடியுமோ? தெரிஞ்சுருந்தா நான் நேத்தே  பாத்து பேசிருந்துருப்பேனே.. ம்ம்க்கும்..ம்ம்க்க்கும்.." என கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொள்ள இடது பிறமாக திரும்பினாள். இருபது மீட்டர் இடைவெளியில் ஒரு உருவம் தன்னைப் பார்த்துகொண்டிருந்தது. ஆம்ம்.. அவன் தான். வைத்தக் கண் வாங்காமல் அவன் அவளையே பார்க்க , அவன் ஏன் பார்க்கிறான் என புரியாமல் அவளும் பார்க்க  விழியை நோக்க ஆரம்பித்தனர்.


இருபத்து  ஐந்து வினாடிகள் அப்படியே 
சென்றன."அவனும் என்னை பாப்பானா? 
தெரியாம போய்ட்டே?.. ஹாய்..னு 
கைய காட்டிரலாமா?" என யோசிக்கும்
 போதே "ஏய்.. வாடி போலாம் என 
அழைத்தாள் நர்மதா. டபக்க் என 
திரும்பிக் கொண்டாள்.அது தான் 
அவள் அவனை கடைசியாக பார்க்கும்  
பார்வை என அவளுக்கு அப்போது தெரியாது
 என்பதால் கை காட்டமல் வந்துவிட்டாள்.
நர்மதாவைத் திட்டிக்கொண்டே சென்றாள்.



"சே.. நான் அழுதது ஒருவேளை  அவனுக்கு கேட்டுருக்குமோ???அப்போ நான் நினைக்குறதெல்லாம் அவனுக்கு கேக்குதுன்னா அவனுக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இருக்கும் போல.. அதான் அவனுக்கு என்னை புடிச்சுருக்கு..அப்டினா அவனை நான் சேர போற காலேஜ்ல சேரணும்னு நெனைச்சுப்பேன்" என  பள்ளி  முடியும்போது நினைத்துக்கொண்டாள்.

ஆனால் அது நடக்கவில்லை.


"நினைக்கும் தருணத்தில் வந்தவன்.
 நினைவிலும் நின்றவன். 
நிச்சயமாக என் கரம் பிடிப்பான் 
 ஒருநாள் " என  கல்லூரி
 முடிவில் நினைத்து கொண்டாள்..

அதுவும் நடக்கவில்லை.அதனால் எதுவுமே நினைக்காமல்.. 








"எங்க டா இருக்ற நீ?.." என facebookகில் அவன் உண்மையான  பெயரான  "மதன்ராஜ்  st.mary's matric. higher secondary school" என்று  டைப் செய்து   தேடிப்பார்த்துக்கொண்டிருக்கிறாள் அலுவலகத்தில் இன்று..... 


கி.பி.2004 இல் நடந்த ஓர் அறுவை கதை அறுவடையானது இத்துடன்...


 


 

No comments:

Post a Comment