Wednesday, 9 July 2014
புகைந்த புன்னகை
தூக்கம் வரல..நெஞ்சு வேற வலிக்குது. வழக்கமான விஷயம் தான். ஆனா வழக்கத்த விட இன்னைக்கு அதிகமா இருக்கு. வழக்கமான காரணம் workpressure அப்றம் டென்ஷன். ஒரு சிகரெட் இல்ல ரெண்டு சிகரெட் பிடிச்சா ரிலாக்ஸாத்தான் இருக்கும்.ஆனா இன்னைக்கு வீட்டுல பிரச்சனை.கல்யாணம் ஆகி 5 வருஷம் கழிச்சு பொறந்த பொண்ணு அகல்யா. என் உயிரே அவதான். அகல்யா ரகுநாதன். இதோ என் பக்கத்துல படுத்துருக்காளே.. இவதான் என் மனைவி. ஜானகி ரகுநாதன். ஆஃபீஸ் ல ப்ராஜெக்ட்ல சின்ன ப்ராப்ளம். டென்ஷன்ல அகல்யாவை அடிச்சுட்டேன். சே தப்பு பண்ணிட்டேன். இப்போ நெனைச்சாலும் அழுகை வருது. டேய்.. கண்ணீர் வருது பாரு..கன்ட்ரோல்.. ரிலாக்ஸ்.. டீப் ப்ரீத் எடுத்துக்கோ டா.. 42 வயசாகுற எனக்கே இவ்ளோ அழுகை வருதுன்னா அந்த ரூம்ல படுத்துருக்குற அகல்யா குட்டிக்கு எப்டி இருக்கும்.. லட்ச்க்கணக்குல சம்பாதிச்சு என்ன ப்ரயோஜனம். என் பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருக்க முடியலயே.. சரி விடு. ஃபீல் பண்ணாத.அகி குட்டியை அவ ரூம்ல போய் பாக்கலாம். அவ கிட்ட படுத்துக்கலாம். "ரகு.. எங்க போறீங்க.." ஜானுவும் இன்னும் தூங்கல. "அகி ரூம்க்கு..பாப்பா தூங்கிட்டாளா..?" பதில்லில்லாமல் மூக்கு உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது. ஜானுவும் அழறா.. என் குடும்பத்த என்னால சந்தோஷமா வெச்சுக்க முடியலயே. எல்லாம் இந்த பாழாய்போன சிகரெட் பழக்கத்தால தான.. என் பொண்ண எப்படி சமாதானப்படுத்த போறேன்னு தெரியலயே.
அகி ரூம் கதவுல "I love my daddy.. but he loves his cigarettes" அப்படின்னு எழுதிருக்கா. எவ்ளோ பாசம் என் பொண்ணுக்கு. கண்ணீர் தான் வருது. ஐயோ.. நெஞ்சு பயங்கரமா வலிக்குது. tablet வேற ரூம்ல இருக்குது.. மொதல்ல அத போட்டுட்டு வரலாம்.cool.. cool... இனி இந்த பாழாபோன சிகரெட்ட நான் தொட மாட்டேன்.கண்ண கட்டிகிட்டு வருது.
இரண்டு நிமிடங்கள் கழித்து...
"அகி குட்டி.. டாடி மேல கோபமாடா.. சாரிம்மா..." திரும்பிக்கூட பார்க்காம டெடி பியரைக் கட்டிக்கிட்டு குப்புறப் படுத்துருக்கா."காலையில அப்பா டென்ஷனா இருக்கும்போது நீ சிகரெட் பாக்கெட்டை ஒழிச்சு வெச்சுட்ட.. அதான்டா கோபத்துல அடிச்சுட்டேன். இனி அப்பா சிகரெட் அடிக்க மாட்டேன். நீ அத திருப்பி தர வேண்டாம்.. அப்பாவ பாருடா.." பதில் வரவில்லை. "ரகு.. அங்க என்ன பண்றீங்க??" ஜானு என்னை தேடி வர்றா."பட்டு குட்டி.. " என என் மகளை தொட்டு தூக்க போனபோது என்னால் அவளைத் தொட முடியவில்லை. அறையின் வாசலில் ஜானுவின் அலறல் சத்தம் கேட்டது.. "ரகு.. ரகு.. என்னாச்சு.. என்னை பாருங்க.." என்று. வெளியே வந்து எட்டிப்பார்க்கையில் என் பிணத்தின் முன்பு ஜானு பதறிப்போய் உட்கார்ந்திருந்தாள்
Subscribe to:
Post Comments (Atom)
filmmakersaj@gmail.com add me in fb . . .
ReplyDelete