Tuesday 25 June 2013

பாட்டி

கோடை விடுமுறை என்பதால் பண்டி 11மணிக்கு ஆரம்பித்த கிரிக்கெட் விளையாட்டை 4மணிக்கு முடிக்க மனமின்றி முடித்து வீட்டிற்கு வந்த பண்டிக்கு பசி வயிறைக்கிள்ளியது. DiningTableல் ஆறிபோன சப்பாத்தியை தட்டில் போட்டு சாப்பிட கை வைத்த போது "எங்க டா போன இவ்ளோ நேரம்??" என கோபமாக பாட்டிக் கேட்டாள். …திரு திருவென முழித்தான் பண்டி. "போய் கைய கழுவிட்டு வந்து சாப்புடுடா" என பாட்டி விரட்டினாள். பின்வாசலிலுள்ள வாஷ்பேஸினில் சோப் போட்டு கழுவிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு பின்புறத்திலிருந்து சோப்புகுமிழ் ஒன்று வந்து அவன் கை முட்டியில் பட்டு உடைந்தது.பக்கத்து வீட்டு ஸின்கா சோப்புகுமிழை இவன் மீது பறக்க விட்டுக்கொண்டிருந்தாள். போட்டி போட்டுக்கொண்டு பண்டியும் கையால் சோப்பு குமிழை  ஊதி ஸின்கா மீது பறக்க விட்டுக்கொண்டிருந்தன். உள்ளேயிருந்து பாட்டி வழக்கத்திற்கு மாறான குரலில் அவனை அழைத்தாள். அதனை கண்டுகொள்ளாமல் இவன் குமிழ் விட்டுகொண்டிருந்தான். பாத்திரம் விழுந்து உடையும் சத்தம் கேட்டபோது  என்னவென்று வந்து பார்த்தான். பாட்டி நெஞ்சு வலியால் துடித்துகொண்டிருந்தாள்.அழுகையுடன் பண்டி பாட்டியிடம் "க்யா ஹூஆ பாட்டி?" என பரிதாபமாக கேட்டான்.பாட்டியால் உதட்டை மட்டுமே அசைக்க முடிந்தது.குரல் எழும்பவில்லை. அவள் கடைசி மூச்சுக்காற்றை சுவாசித்து இறந்துவிட்டாள். இரண்டு வாரம் கழித்து பின் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தான் பண்டி. பாட்டி  போலவே ஓர் உருவம்.. அருகில் சென்று தான் பார்த்துவிடுவோமே என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல நடந்தான். அப்போது தான் இறக்கும் தருவாயில் பாட்டி ஏதோ முணுமுணுத்தது நினைவு வந்தது. அருகில் சென்று "க்யா ஹூஆ பாட்டி?"  எனக் கேட்டான்.வாஷ்பேஸின் மேலேஇருந்த சோப்பை தூக்கி எறிந்துவிட்டு பாட்டியின் ஆவி கேட்டது "ஹேய்..பண்டி உன் சோப் என்ன ஸ்லோவா?" 



No comments:

Post a Comment