Monday 8 July 2013

கட்டிக் கொடுத்த நாள்


அடுப்பறையிலிருந்து அவளைஅனுப்பி வைக்கும் நாள் இன்று..
மூலையில் கிடந்தவள்
முச்சந்தி வழியாக உலா
செல்லும் நாள் இன்று.. - இதோ

மணவாளனும் வந்துவிட்டான்
மாநகராட்சி வண்டியுடன்.
கட்டிக் கொண்டு போனான்
கவரில் கட்டி வைத்திருந்த
காய்கறி குப்பையை!!!

No comments:

Post a Comment