Tuesday 7 May 2013

தூக்க்க்கம்


















விழிகள் முக்கால் பங்கு
விழித்திருந்த நிலையில்

வினோத காட்சிகளைக் காண்கிறேன்.
விசைப்பலகையில் விண்மீன்கள் மின்னுகின்றன.
திரையில் எழுத்துக்கள் திக்குமுக்காடி திரிகின்றன.
விரல்கள் அசைகையில் அம்புக்குறி ஒன்று
அலைபாய்கிறது ஆங்கில எழுத்துக்களின் நடுவே..
இருகரம் சேர்க்கத்துடிக்கும் கீழிமைக்கும் மேலிமைக்கும்
இடையில் நான் இங்கிதமில்லாமல் நிற்கிறேன்.
கடுப்பான இவ்விரண்டு ஜோடிகளும்
கட்டிவைத்து மிதித்தன என்னை try blockல் வைத்து..
குத்துயிர் குறையுயிராய் என்னை catch blockல் வீசும்போது
விழித்துக் கொண்டேன் உண்ட மயக்கத்திலிருந்து...
மண்டையில் அடித்துக்கொண்டு
மீண்டுவிட்டேன் மதிய நேர உறக்கத்திலிருந்து

No comments:

Post a Comment