Monday 20 May 2013

(உஷ்)ஷூ







டப டப டப என மோட்டார் சத்தம்..
"மா கீர... ஒரு கட்டு 5ரூவா.." என கீரைகாரியின் கூவல்..
குப்பை வண்டிக்காரனின் விசில் சத்தம் இவை மட்டுமல்ல..
பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் சிந்தும் சத்தமும் சேர்த்து மனோஜை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அரைத்தூக்கத்திற்கு எழுப்பியது.. முகத்தில் சுளீர் என சூரியஒளி பட்டதால் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் உறக்கத்தை தொடர்ந்தான். "அப்பா.. அப்பா.." என கிரவுண்ட் ஃப்ளோரிலிருந்து சத்தம் கேட்டு மறுபடியும் முழித்துக்கொண்டான். பாத்ரூமிலிருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே வந்ததால் உஷா இன்னும் குளித்து முடிக்கவில்லை என தெரிந்துகொண்டான்."ஏய்.. உஷ்ஷு பையன் கீழ என்னடி பண்றான்?" என முனகிகொண்டே கேட்டான். பதில் வரவில்லை. "அப்பா.. அப்பா.." என மறுபடியும் அந்த குரல் கேட்டது.. "ஏய் உஷ்ஷு..போடி.. போய் என்னனு கேளுடி.." என கொஞ்சம் உரக்கக்கேட்டான் பதில் வரவில்லை."அப்பா.. கீழ இறங்கி வாங்கப்பா.." இப்போது எரிச்சலுடன் பையன் அழைத்தான். மனோஜ் உஷாவை அழைக்க வாயைத்திறக்கும்போதே பாத்ரூம்  கதவு திறந்து கொண்டது."உஷா பையனக்கூட்டிட்டு வர போயிட்டா.. இனி நிம்மதியா தூங்கலாம் என ஆரம்பித்தபோது "பப்புகுட்டி..  டாடி வந்துட்டேன்டா.. " என பக்கத்து அப்பார்ட்மென்ட் நித்யானந்தத்தின் குரல் கேட்டது. "டேய்.. யாருக்கு யாருடா டாடி?.. உன் பேரு மட்டும்தான் நித்யானந்தம்னா.. பண்ற வேலை கூடவா?.. உஷ்ஷூ  நில்லுடீ.. " என அலறியடித்துக்கொண்டு பெட்ரூம் கதவைத் திறந்தபோது அவன் நண்பன் ப்ரசன்னா கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.அப்போது தான் அது கனவு என்பது தெரிந்தது ..  ஜன்னல் வழியாக மனோஜ் கீழே எட்டிப்பார்த்தபோது நித்யானந்தம் தன் மகனை ஏற்றிக்கொண்டு டூவீலரில் கிளம்பிக்கொண்டிருந்தார்.. ப்ரசன்னா மனோஜிடம்  "டேய் இந்தாடா உன் ஷூ.. பத்திரமாதான் இருக்கு.. தூக்கத்துல கூடவா ஷூ ஷூனு புலம்புவ?.." என ஷூவை எடுத்து அவன் முன்பு போட்டான்.அம்மாவிடமிருந்து வந்த கைபேசி அழைப்பை எடுத்து பேசும்போது அம்மா சொன்னாள் "டேய்.. அப்பாக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குதாம்.. பொண்ணு பாக்க நாளைக்கு போலாம்னு சொல்லிட்டாருடா.."  என்றாள்

No comments:

Post a Comment