Wednesday 1 May 2013

பப்பி





கையில் டார்ச் லைட் பிடித்துக்கொன்டு கௌதம் புதருக்கடியில் எதையோ தேடிக்கொண்டிருப்பதைப்  பார்த்து வாசலருகில் உட்கார்ந்திருந்த  வாட்ச்மேனும்  சுப்பையா வாத்தியாரும் "என்ன கௌதம் சார்?.. நாய்க்குட்டி இன்னும் கெடைக்கலயா?" எனக்கேட்டனர். "ஆமா சார்.. நானும் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருக்கேன். குட்டி   இல்லாம இந்த ரோஸி சாப்ட்றதே  இல்ல.. டாமிக்கு சாப்பாடு வைக்க்குற தட்டையே வெறிச்சு பாத்துட்டு  இருக்கு  " என பதில் கூறிவிட்டு தேடலை மறுபடியும் தொடங்கியவாறேச் சென்று விட்டார். அவர் அந்த இடத்தை விட்டு கிளம்பியதும் "அந்த ரோஸி நாயை  அவரோட பொண்டாட்டி தான்யா இவருக்கு பரிசா குடுத்துச்சு.. அந்த நாய் கூட குட்டியும் குடியுமா  இருக்கு .. இவரு மட்டும் விவாகரத்தாகி தனியா நிக்குறாரு.. தண்ணியடிச்சுட்டு போட்டு அடிச்சா  கட்டுன பொண்டாட்டி மட்டுமில்லயா.. கட்டி போட்டுருகுற நாய்குட்டி கூட விட்டுட்டு போயிடும்.."  என கேலி  செய்து கொண்டனர். ஒரு வாரம் கழித்து ரோஸியை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாகும் நிலையிலிருந்த  ரோஸி  காரின் ஜன்னல் வழியாக எக்டயோ பார்த்து உற்சாகமாக கத்தியது. என்னவென்று எட்டிப் பார்த்த கௌதம் டாமி ஒரு மரத்தடி நிழலில் குட்டிப்பையன் ஒருவன் மடியில்  இருப்பதைக்கண்டு பூரிப்படந்தார். கதவை திறந்தவுடன் ரோஸி வேகமாகச் சென்று டாமியை வாலை ஆட்டிக்கொண்டே  நக்கியது. பெரிய நாயை பார்த்ததும் அந்த சிறுவன் சற்று மிரண்டான். அதற்குள் கௌதம் வந்து "தம்பி.. இந்த நாய்க்குட்டி என்னொட நாய்க்குட்டிபா.. அத என்கிட்ட குடுத்துடுறியா? என கேட்டவுடன் அவன் "இது என்னோட பப்பி.. நா யாருக்கும் தர மாட்டேன்.. "  என மடியிலிருந்த நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.. சிரித்துக்கொண்டே கௌதம் "பாருப்பா.. நீ உங்க அம்மா  கூட இருக்ற மாதிரி தானே இந்த நாய்குட்டியும் பாவம்ல.. அதுவும் அதோட அம்மா கூட தானே இருக்கணும்.." என ரோஸியை அவனிடம் காட்டினார். சிறிது யோசிக்க ஆரம்பித்த அந்த சிறுவனிடம் " நீ இப்போ இந்த பப்பிய அதோட மம்மிகிட்ட குடுத்துருவியாம்.. உனக்கு பாக்கணும்னு  தோணும்போது வந்து பாத்துக்குவியாம்.. சமத்து பையன்ல.." என்றதும் அவன் ஒரு வழியாக  சமாதானம் ஆகி "பப்பிக்குட்டி.. நீ உங்க மம்மிகூட போ.. நா ஒரு நாள் உனக்கு பிஸ்கட் வாங்கிட்டு வர்றேன்.." என அவரிடம் குடுத்தான். புன்னைகைத்துகொண்டே அவன் கன்னத்தை கிள்ளி விட்டு நாய்குட்டியை வாங்கியவுடன் ரோஸியும் டாமியும் வாலை ஆட்டிகொண்டே இருந்தன. கௌதம் திரும்பியவுடன் சிறுவன் கேட்டான் "அங்கிள்.. பப்பியோட டாடி எங்க? அதுவும் எங்க டாடி மாதிரி மம்மிய  அடிச்சுச்சுனா  என்கிட்ட ரெண்டையும் குடுத்துருங்க.."  என வலதுகை ஆள்காட்டி விரலையும் தலையயும் ஆட்டிக்கொண்டே கேட்டபோது பரிமளாகௌதம் "அஷ்வின்.. ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு பாரு..."  என  கையிலிருந்த  அவன்  ஸ்கூல் லஞ்ச் பேகை குனிந்து சரிசெய்து கொண்டிருந்தார்

No comments:

Post a Comment