Saturday 30 March 2013

ஆவி(in) கதை




ஒன்பது மணி அளவில்.. மரத்தடி மணல் குவியலில் கையை புறங்கட்டி கொண்டு கால் மீது கால் போட்டுக்கொண்டு படுத்திருந்தார் சுந்தரமூர்த்தி.பக்கத்தில் கிருஷ்ணசாமி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.."என்னடா கிருஷ்ணா..தீவிரமா  எதயோ திங்க் பண்ணிட்டு இருக்ற போல?"..அது வரை வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமி திரும்பி பார்த்து சுந்தரமூர்த்தியிடம் "அது ஒண்ணுமில்ல டா.. சின்ன வயசுல எங்க பாட்டி செத்துபோனவங்களெல்லாம் வானத்துல நட்சத்திரமாயிடுவாங்கனு சொன்னுச்சு டா.. அத நான் அப்போ உண்மைனு நம்பியிருக்றேன் டா..அத பத்தி தான்டா யோசிச்சுட்டு இருந்தேன்."என்று பதில்ளித்தார்." டேய் நீயாச்சும் பரவா இல்ல டா.. நான் ஆவிகளுக்கெல்லாம் ஒரு கண்ணு நாலு வாய் இருக்கும்னு நெனைச்சுருக்கேன் டா". வெள்ளை கலர் ட்ரெஸ்ஸ் போட்டுருந்தா ஆவி நம்மல கடிச்சுட்டு ட்ரெஸ்ஸ வாங்கிட்டு போயிடும்... நைட்டு வீட்டுகுள்ள பாட்டு பாடிகிட்டே கொலுசு போட்டுகிட்டு நடக்கும்.. எப்டிலாம் நம்பிருக்கோம் பாரு டா.. அப்போ ஆம்பிள ஆவி கொலுசுக்கு எங்கடா போகும்.?" என்றார் நக்கலாக. "எல்லாம் பொய்னு இப்போதான் டா புரியுது.. நீ மட்டும் அன்னைக்கு phone பேசாம car ஓட்டியிருந்தா இப்போ அது கூட புரிஞ்சுருக்காது இல்லடா" என இருவரும் கலாய்த்து கொண்டு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று படுத்துகொண்டனர். 

No comments:

Post a Comment