Wednesday 20 March 2013

அரை நிமிட கதை

 
 "என்னங்க.. Time ஆய்டுச்சு பாருங்க..கிளம்புங்க சீக்கிரம்.." பத்மாவின் குரல் பலமாக ஒலிக்கையில் ரமணியம்மாள் கோலம்போட்டு முடித்து உள்ளே வந்து கொண்டிருந்தாள். "குட்டி செல்லத்துக்கு சோம்பேறித்தனத்தை பாரு" என்று தலையை கோதிவிட்டாள் தன் கணவனுக்கு. "ம்ம்ம்.. இன்னைக்கு officeக்கு கண்டிப்பா போணுமாடீ." என கொஞ்சிக் கொண்டே கேட்டான் பாலகிருஷ்ணன்.அடுப்பறயில் இருந்து சாம்பார் வாசம் வந்ததும் "பாருங்க அத்தை இன்னைக்கு நமக்காக சாம்பார் செஞ்சு வெச்சுருக்காங்க. சீக்கிரமா கிளம்புங்க.. என்செல்லக்குட்டி இல்ல.." என குழந்தை கையை பிடித்து இழுத்துசெல்வது போல அவனை அடுப்பறைக்கு இழுத்துச் சென்றாள். சமையல் வேலையை முடித்துவிட்டு பின் வாசல் வழியாக ரமணியம்மாள் பக்கத்துவீட்டுக்குச்  சென்று "சின்னஞ்சிறுசுக சந்தோஷமா இருக்குறத பாக்கும்போதுதான் மனசு நெறஞ்சாப்புல இருக்கு.." என் ஆரம்பித்து அவனுக்கு கல்லூரியில் கிடத்த தங்கப்பதக்கம், பள்ளிபருவத்தில் சைக்கிளுக்காக் சாப்பிடாமல் அடம்பிடித்தது,3வயதில்  காய்ச்சல் வந்த அம்மாவிற்கு அவனே ஊட்டி விட்டது, தன் நிழலை பார்த்து தானே பயந்தது, என அவனை பற்றியே வெகு நேரம் பேசி முடித்து,வீட்டிற்கு திரும்பினாள். "office ல தான் manager.. வீட்டுல இன்னும் குழந்தை.. ச்சீ.." என பத்மா office bag ஐ அவனுக்கு எடுத்து  கொடுத்தாள். "ஆமாடீ.. உனக்கு மட்டும் தான் நான் குழந்தை.." என்றான் செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு."அப்போ நான் யாருடா?" என மனதிற்குள் அழுது கொண்டாள் ரமணியம்மாள்

No comments:

Post a Comment