Thursday 25 August 2011

தலைநரகம்- எழுத்துப்பிழை

                                           தலைநரகம்- எழுத்துப்பிழை
                               


இருநூறுரூபாய் என்றார்
முடியாது நூறுரூபாய்தான் என்றேன்
முப்பது ரூபாய் குறைத்தான்
அடுத்தக்கடையைப் பார்த்தேன்
ஐம்பதுரூபாய் குறைத்தான்
இரண்டுஅடி நகர்ந்தேன்.
"இந்தாம்மா!! புடி" என்று கொடுத்தான்

-நடைபாதை கடையில்...





இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை
இடைஇடையே நின்று மூச்சுவாங்கும் பேருந்துகள்.
பயணச்சீட்டு பயணிகளின் கைகளில் பயணிக்கிறது.


"அண்ணே அடுத்தஸ்டாப்பில் நிக்குமா?"  என்று கேட்டு வாயை மூடிய நிலையில்
இவரைப்பார்த்தால் வண்டி நிற்கும்.
நிக்காது என்று பதில் வந்தால் நிற்காது.
-நடக்காமல் ஒக்காந்துகினே இருக்கும் நடத்துனர்.

சில்லறை இல்லைனா சீறிப்பாய்வார்.
சிரித்த முகத்தை மறைத்து சிடுசிடுன்னு இருப்பார்.







தவிடுபொடியான் தினத்தந்தியின் 8வதுபக்கம்
தாத்தா துப்பிப்போட்ட வெற்றிலை.
கசாப்புக்கடையில் வாங்கிச்சென்ற
கருப்பு பாலிதீன் பை,
கழற்றிப்போட்ட பேனாமூடி.
உதிர்ந்த தலைமுடி ஒரு கொத்து,
மூன்று கைப்பிடி மண்.
டீக்கடைப்பக்கம் டீனேஜ் பையன்
அடித்த சிகரெட் துண்டு.
தி-நகரில் வாங்கிகாலியான நகப்பூச்சு புட்டி..
இவைகளின் சங்கமம்- சாக்கடைஓரக்குவியல்.





காவிரியை கமண்டலத்திற்குள் அடைத்த
அகத்திய முனிவரின் அடுத்த பிறவிகள்
ஆயிரம் பேரைக்கண்டேன்.
கூவம் ஆற்றைக் குளிக்கச்செய்து
பிளாஸ்டிக் குண்டாவில் அடைத்து வியாபாரம்.


கஞ்சிப்போட்டு விறைப்பாய் சட்டையணிந்து
காலர்பட்டனும் டையும் அணிந்து வந்தாலும்
கங்காருபோல குத்தவெச்சு குந்த வைக்கிறது.
-Share Auto 





தெரு முக்குகளில் முழம் பத்துரூபாய்க்கு 
மணமில்லா மல்லிகைப்பூ
'பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.'
பழமொழி மாற்றப்பட்டுள்ளது
'பூவோடு சேர்ந்த நூலும் உதிரும்'- அங்ஆங்பா...







உயிரற்ற பொம்மை ஒன்று  
உயர்தர ஆடை அணிந்திருக்க, 
அதனருகே உயிருள்ள பிள்ளை
கிழிந்த ஆடையுடன்,
வீடுஇல்லை என்பதையும் மறந்து
வீட்டுப்பாடம் எழுதிய சட்டப்பலகை
மழைத்தண்ணீரில் நனைந்ததை நினைத்து....



வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற விளம்பரப்பலகையின் கீழ் 
நான்கு மூட்டைகள்,மூன்று செங்கல்
ஒரு குடம் தண்ணீருடன் குடித்தனம்.


"கூ.. சிக்குபுக்கு... சிக்குபுக்கு.." என்பது 
இன்று பாஷை மாற்றிக்கொண்டது. 
"பாம்..டக்குபுக்கு டக்குபுக்கு" என்று 
எலெக்ட்ரிக் ரயிலானது.
Stationல் காவலாளிகளின் Sincerity
சிலிர்க்க வைக்கிறது- மாத இறுதியில் மட்டும்.

அம்பு நுழையும் இதயத்தில் காதலர்களின் பெயரையும், 
அகர வரிசையில் கல்லூரி நண்பர்களின் பெயர்களையும் 
வழியெல்லாம் தூக்கிச்செல்லும் 
வரலாற்றுக் கல்வெட்டு.
வந்துசேர வேண்டிய இடத்தில் இறங்கியதும் 
கைப்பையில் வெட்டு.



வண்ணம் தீட்டி வரைந்து பழக வேண்டிய கைகள். 
விரல்களுக்கிடையில் புத்தகம் வைத்து
வியாபாரம் செய்கின்றான்.
"அக்கா அக்கா படம் வரையுற புக் கா.. 
ஒன்னு வாங்கிகோக்கா.. 
நாளைக்கு ஸ்கூலுக்குப் போணும்கா.."

இரண்டாவது படிப்பதாகச் சொல்லும்
இவனை நம்புவதா? வேண்டாமா?
'தர்மம் தலை காக்கவில்லை தலையைப் பிய்க்க வைக்கிறது'






முகம் தெரிந்தவர்கள் 
முக்குத் தெருவில்தான் வசிக்கிறார்கள் 
என்பதைத் தெரிந்துக்கொள்ள
வெகுகாலமாகிறது.
முகநூலில்  மட்டும் தினமும்
உரையாடல் நிகழ்கிறது.




விஷேச நாட்களில்  சேலை கட்டும் 
பெண்கள் கூட உண்டு
ஆனால்  அரசியல்வாதியைத் தவிர
வெள்ளைவேட்டி சட்டை கட்டும் 
ஆண்களைப் பார்ப்பது என்பது
வேலை கிடைப்பதைவிட அரிதாக இருக்கிறது







ஆறிலும் சாவு, அறுபதிலும் சாவு.
அவசரப்பட்டவனுக்கு  மட்டும்
ஆம்புலன்ஸ் வருவதற்குள் சாவு.
அலெர்ட்டா இருந்தாலும் 
அக்ஸிடென்ட்டுக்கு மட்டுமில்லைத் தீர்வு.






ஆள் பாதி ஆடை பாதி அல்ல.
ஆள் பாதி ஆடை கால்வாசி. 
Id card கால்வாசி..
மனிதனின் அடையாளம் 
முகத்தால் காணப்படவில்லை.
கழுத்தில் தொங்கவிடப்படுகிறது.








நரகத்திலும் எனக்கு நல்ல நண்பர்கள்.

கண்ணீர் வந்தால் கைக்குட்டையோடு போகும்.
இன்பம் வந்தால் இனிப்பு வந்து குமியும்.
நண்பர்கள் மட்டும் அல்ல.
நண்பனின் நண்பர்கள் என என் வட்டம் பெருக்கிறது.




"நரகத்தில் எண்ணையில்
வறுபட்டு கருகுகிறேன்" என
face book stauts போடுகையில் comment வருகிறது-
"இன்னா மச்சி.. வறுக்காமலேயே நீ
இவ்ளோ கருப்பா? ஹ ஹா ஹா"-என்று.
 




10 comments:

  1. வேலை கொடுமை கொடுமைன்னு ப்ளாக் வந்தா இங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு போட்டுட்டு ஆடுதுடா சாமி.... dont worry be happyyyyyyyyyyy....

    ReplyDelete
  2. சூப்பர் அப்பு....உன் புகழ் ஓங்குக

    ReplyDelete
  3. "நரகத்தில் எண்ணையில்
    வறுபட்டு கருகுகிறேன்" என
    face book stauts போடுகையில் comment வருகிறது-
    "இன்னா மச்சி.. வறுக்காமலேயே நீ
    இவ்ளோ கருப்பா? ஹ ஹா ஹா"-என்று.
    Super machi...Exact Kavithai

    ReplyDelete
  4. Plastic gunda dhan super
    Mukkal kalakkal, bakki mokka,
    room pottu yoshicha madhiriye iruku

    ReplyDelete
  5. Nadai padhai kadai also awesome

    ReplyDelete
  6. நல்ல கற்பனை... அருமையா எழுதுறீங்க

    ReplyDelete
  7. Really super awesome, your writing style is great and got inspired by you!

    ReplyDelete