ஏர் பிடித்து உழுநிலத்தில் உழுது
ஊர் உண்ணும் உணவை
உற்பத்தி செய்கிறார் என் அப்பா- விவசாயி
A/C-Room ல் computer முன் உட்கார்ந்து
கை நிறைய சம்பாதித்தாலும்
Computer Engineer எனக்கு
கூழ் குடிக்கும் சந்தோஷம்
cooldrinksல் இல்லை.
ஓட்டுக்குடிசையின் அருகில் ஓலைக்குடிசை
ஆட்டுக்குட்டியின் அருகில் கூட்டமாய் கோழிகள்
ஓட்டமும் விளையாட்டும் ஓடைக்கரையில்
ஆட்டமும் பாட்டும் அடிக்கும் வெயிலில்
அறுவடையுடன் வயல்காட்டில்
company ல் களைப்புடன் 10௦ மணிநேரம்
green signal இல்லாத trafficல் 2 மணிநேரம்
கால்கட்டைவிரலை காணத்தடுக்கும் தொப்பையைக்
குறைக்க காலையில் ஜாக்கிங் 2 மணிநேரம்
குட்டி ஜிம்மியுடன் மாலையில் வாக்கிங் 2 மணிநேரம்
கட்டில் மெத்தையில் 6மணிநேரம் படுத்தாலும்
கொசுவின் கச்சேரியுடன் கட்டாந்தரையில் வரும்
கனவு இப்போது கொஞ்சமும் இல்லை கண்களில்
கமகமக்கும் மல்லிகையும் காஞ்சிக் குங்குமமுமிட்டு
கை நிறைய வளையலும் கண்டாங்கி சேலையும் கட்டி
காட்டுச்சுள்ளி அடுப்பில் எரிய
கண்கள் முகத்தில் எரிய
கண்ணீர் அந்த கண்களில் வழிய
கமகமக கையால் கஞ்சி ஊட்டுவாள் -என் அம்மா
pizza சாப்பிட்டு pepsi குடித்து
Ice-Cream மும் அயல்நாட்டு chocolateம்
Noodlesம் நூறாயிரம் 5star hotel ம் கண்டாலும்
மண்பானைச்சோறும் மிளகாயும் , மாங்காய் ஊறுகாயுமின்றி
'அடக்கம் செய்யுங்கள் என்னை ' எனக் கெஞ்சுகிறது
செத்து மடிந்த என் நாக்கு
குயில்பாட்டு கருவேலங்காட்டில்
குளத்தில் தாளமிடும் கொக்குகளும்
குடத்துடன் ஆற்றில் தண்ணீர் எடுக்கும்
குமரிப் பெண்கூட்டம் சலங்கை
கொலுசுகள் தாளமிடும் -நான் பிறந்த கிராமத்தில்
Telephone ன் கைக்குழந்தை
Mobilephoneன் ringtoneகள்
எங்கெங்கும் சிணுங்க
MP3ல் இளையராஜாவின் இன்னிசை கேட்டாலும்
என் தாயின் தாலாட்டினை கேட்க இயலவில்லை .
ஏலேலோ ஐலசா தெம்மாங்கு இங்கில்லை
மூளையை கசக்கி பிழிந்து
நான் சம்பாதிப்பது
மூலையில் மூட்டைமூட்டையாய் பணத்தை
முடக்கி வைத்திட அல்ல
குடிசையிலும் குட்டி குட்டி பில்கேட்ஸ்கள்
விரல்களும் compaq laptopல் விளையாட!!!
Super....real comparison....Dont have words to praise you suba.....Keep going....Software Engineer "THE ROCK"
ReplyDeletethanks boss
ReplyDeleteAwesome subha!! Not expected.. great !! Keep rocking..
ReplyDelete-Chitra
Superb...
ReplyDeleteHello Gr8 appreciative poet :)
ReplyDeleteWhere are you hiding these days? :)
கலக்குறீங்க....:)
ReplyDeletekalaku :)
ReplyDeletene s/w engg thane :)
MASSSSS..... Waiting for more:):)
ReplyDeleteIt's reminds my native and my past..
ReplyDeleteReally awesome..
B-E-A-U-T-I-F-U-L Post!! :-) Great Work Subha!
ReplyDeleteakka.... am proud to say as ur thambi.. eppo irundhu idhellam arambichinga????
ReplyDeleteReally nice. Super ma. I have seen myself in these words. I wrote similar kind of post in 2008. Keep going
ReplyDelete