அப்போ எனக்கு வயசு 6. எங்க வீட்டுக்கு
பக்கத்துல ஒரு குட்டி கடை உண்டு .
அந்த கடையில போயி என் அம்மா என்னை
கால் கிலோ sugar வாங்கிட்டு வர சொன்னாங்க .
நான் போக மாட்டேன்னு அடம்புடிச்சேன்.
ஆனா கோபத்துல அம்மா என்னை அடிச்சுட்டாங்க .
அதனால நான் வாழ்க்கையில விரக்தி அடைஞ்சு
கோபமா கடைக்கு போனேன். |
 |
தெரியுமா? அந்த கடை அடுத்த தெருவுல தான் இருக்கு . ஆனா ஏன்னு தெரியல நான் கோபத்துல railway station வழியா போனேன் . ஐய்யயோ !! அழுகை வேற நிக்க மாட்டேங்குது . சும்மாவா பின்ன ? எப்படி அடிச்சாங்க தெரியுமா எங்க அம்மா ?
நான் ஒரு yellow color frock போட்டுருந்தேன். சுத்தி ஒரே செம்மண். நான் ஐயோ பாவம் செருப்பு கூட போடல. அழுதுகிட்டே போறேன். அங்க பாத்தா ஒரு தண்டவாளம். அந்த தண்டவாளம் மேல ஏறி நடந்துகிட்டே அழுவுறேன்

அப்புறம் அந்த தண்டவாளம் ஒரு பாலம் மேல இருந்துச்சா!! அதுல அப்படியே நடந்து போனேன்.அந்த பாலத்துக்கு கீழ ஒரு பெரிய ஆறு. சொன்னா நம்ப மாட்டீங்க. அந்த ஆத்துல தண்ணி light green கலர்ல இருந்துச்சு. ஆனா அத ரசிக்குற moodல நான் இல்ல. அதனால நான் நடந்துக்கிட்டே இருந்தேன்.

டொய்ய்ங்க்க்க்க் .அய்யயோ. போச்சு ஒரு train வந்துட்டு இருக்கு. அது தெரியாம நான் அந்த பெரிய பாலத்துல நடக்க ஆரம்பிச்சுட்டேன்
இப்ப என்ன பண்றது? அம்மாகிட்ட போனும்.. ம்ம்ம் ம்ம்ம்ஊம் . அச்சோ train பக்கத்துல வந்துட்டே!!
இப்ப வேற வழியே இல்லையா? நான் என்ன பண்ணுவேன்?
ஐயையோ. அம்மா வேற தேடுவாங்களே! train வேற வருது. ஒன்னு பண்ணலாம். தண்ணியில குதிச்சுடலாம்னு குதிச்சுட்டேன் .
அச்சச்சோ எனக்கு நீச்சல் தெரியாதே? அப்படின்னா செத்து போயிடுவேனா? அப்படிங்கற பயத்துல அப்புறம் முழிச்சுட்டேன். அவ்ளோ தான் என் கனவு.
இங்கேயும் கனவா? :O
ReplyDeleteawesome dream cutie have sweet dreams always and forever with u chellam
ReplyDeletekavula kooda adi vanguriyee ....
ReplyDeletenalla sindhanai :)
ReplyDelete